India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரக்கோணம் வட்டாட்சியர் செல்வி சோளிங்கருக்கும், சோளிங்கர் வட்டாட்சியர் ஸ்ரீதேவி அரக்கோணதிற்கும், ஆற்காடு வட்டாட்சியர் அருள் செல்வம் வாலாஜாவுக்கும், வாலாஜா வட்டாட்சியர் வெங்கடேசன் திண்டிவனம் நகரி ரயில் பாதை ஆற்காட்டுக்கும், வாலாஜா தனி வட்டாட்சியர் ராஜலட்சுமி சோளிங்கருக்கும் என மொத்தம் 20 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தென்காசி மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் சார்பில் வழங்கப்படும் கடனுதவி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில், வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்சியர், “விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நகை கடன் வழங்கும்போது கனிவுடன் வழங்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வங்கி கணக்கு துவங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனிப்பிரிவு ஏட்டுகளாக ரகுராமன், காந்தி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்களை ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்தும், மேலும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என மொத்தம் 33 பேரை ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் சப்-டிவிஷன் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்துறை சார்பில் காரிப் பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு காப்பீடுகளை விவசாயிகள் செய்வது குறித்த மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் , வேளாண் இணை இயக்குனர் தபேந்திரன், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் லதா மகேஷ் கலந்து கொண்டனர்.
முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு அதிகபட்சமாக 20 கிலோ வீதம் 50% மானியத்தில், தக்கைப்பூண்டு உர விதைகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் உழவன் செயலியில் பதிவு செய்து பயன் பெறலாம் என்றும், இதுகுறித்த விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் போது இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாலாறு அணைக்கட்டில் அமைந்துள்ள அணை சேதமடைந்து காணப்படுவதால், ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் இந்த அணையில் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் போது, 310 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ராணிப்பேட்டையின் வரலாற்று அடையாளமாக திகழும் பாலாறு நதிக்கரையில் அமைத்துள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவுச் சின்னங்கள் ரூபாய் 2.5 கோடியில் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரக்கோணம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காரை மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் 5 ஆசிரியர் பணியிடங்கள் பள்ளி மேலாண்மை குழு மூலம் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. மேலும் இதுகுறித்து விவரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலரை ஜூலை 7 ஆம் தேதிக்குள் நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம் எஸ் பி கிரண்ஸ்ருதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் காதல் திருமணம் செய்த நிலையில் கணவன் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவது, கந்துவட்டி, சைபர் கிரைம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் குறித்து 39 பேர் மனுக்கள் கொடுத்தனர். சம்பந்தப்பட்ட மனுக்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நான்காவது நாளாக இன்று மாவட்ட ஆட்சியரும் ஜமாபந்தி அலுவலருமான வளர்மதி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். வட்டாட்சியர் அருள்செல்வம் உடன் இருந்தார். மேலும் துறை சார்ந்த அலுவலர்களான ரூபி, பாபு பொன்னையா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.