India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் வளர்மதி பேசுகையில், குடிநீர் திட்ட பணிகள் 2023-24-ம் நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் திட்ட இயக்குநர் லோகநாயகி உதவி இயக்குனர் சுதா கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, கலால் உதவி ஆணையாளர் வரதராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற் பிரிவுகளில் 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நேரடி சேர்க்கை மூலமாக நிரப்பப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழிற்பயிற்சி நிலையத்திலேயே விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஜூலை 13 அன்று நடைபெற உள்ள TNPSC GROUP 1 தேர்விற்கான முழுப்பாட மாதிரி தேர்வுகள் நாளை (ஜூலை.2) காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04172291400 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வ.வளர்ச்சி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜோசப்கென்னடி, அரக்கோணம் வ.வளர்ச்சி அலுவலராகவும், நெமிலி வ.வளர்ச்சி அலுவலர் வஜ்ஜிர வேலு ஆற்காட்டுக்கும், அங்கு பணியாற்றி வந்த சிவக்குமார் வாலாஜாவுக்கும், அங்கு பணியாற்றி வந்த சிவராமன் கலெக்டர் அலுவலக கண்காணிப்பாளராகவும் என மாவட்ட முழுவதும் 15 பிடிஓகளை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் TNPSC குரூர் 2 மற்றும் 2A காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் deoranipet.studycircle@gmail.com மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன் தரலாம் என தெரிவித்துள்ளார்.
இன்று(ஜூலை 1) முதல் மத்திய அரசு 3 புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதை கண்டித்து முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், மாவட்ட நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் சுரேந்திரன் வழக்கறிஞர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. திட்ட இயக்குநர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கைத்தறி மானிய கோரிக்கையில் நெசவாளர்களுக்கு 10% கூலி உயர்த்தி அறிவித்ததற்காக, அமைச்சருக்கு நேற்று(ஜூன் 30) ராணிப்பேட்டை மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் குலோத்துங்கன் நன்றி தெரிவித்தார். பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தியை நேரில் சந்தித்து இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தார்.
ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரும், இராணிப்பேட்டை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான எல். ஈஸ்வரப்பன் இராணிப்பேட்டை மாவட்ட சட்டமன்ற நூலகக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அமைச்சரும் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Sorry, no posts matched your criteria.