Ranipet

News July 5, 2024

இலவசமாக மண் எடுக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாய பணி மற்றும் பானை செய்வதற்கு ஏரிகளில் இருந்து களிமண், வண்டல் மண் இலவசமாக எடுக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பதாரர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்

News July 5, 2024

ராணிப்பேட்டையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்

image

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை, மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக் கொள்ள ஏதுவாக வழக்காடிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் 29.7.2024 முதல் 3.8.2024 வரை ஒரு வாரம் ராணிப்பேட்டையில் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப் பணிகள் குழுவினை 04172-230877 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.

News July 4, 2024

ராணிப்பேட்டை: TNPSC GROUP 1 மாதிரி தேர்வு

image

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஜூலை 13 அன்று நடைபெற உள்ள TNPSC GROUP 1 தேர்விற்கான முழுப்பாட மாதிரி தேர்வுகள் நாளை (ஜூலை.5) காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04172291400 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News July 4, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் (இரவு 8.30 வரை ) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News July 4, 2024

ராணிப்பேட்டை: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று(ஜூலை 3) வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தமிழ்நாட்டின் பல் பகுதிகளில் நேற்று இரவு முதல் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷண நிலை காணப்படுகிறது.

News July 3, 2024

 மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைத்தீர்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று(ஜூலை 3) நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி பொதுமக்களிடமிருந்து 48 மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அருண்குமார் உடன் இருந்தனர்.

News July 2, 2024

மாதிரி தேர்வில் கலந்து கொண்ட தேர்வாளர்கள்

image

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஜூலை 13 அன்று நடைபெற உள்ள TNPSC குரூப் 1 தேர்விற்கான முழுப்பாட மாதிரி தேர்வு இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் கலந்து கொண்டு மாதிரி தேர்வினை எழுதினர்.

News July 2, 2024

அரக்கோணம் ஐடிஐயில் நேரடியாக சேர வாய்ப்பு

image

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இயங்கி வரும் அரசு ஐடிஐயில் நேரடி சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஜூலை 15ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுவதால் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூடுதல் விவரங்களுக்கு 94990 55679 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

இராணிப்பேட்டை: விவசாயிகளுக்கு அழைப்பு

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க தோப்பு, பழத் தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனத்தை பயிரிட இராணிப்பேட்டை மாவட்டத்தில் 50 ஏக்கர் இடத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.3000 வீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்திட உள்ளனர். திறமையும் ஆர்வமுள்ளவர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகலாம் என ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

தமிழ்நாடு நாள் விழா; மாணவர்களுக்கு போட்டி

image

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து 6ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூலை 9ஆம் தேதி காலை 9:30 மணிக்கு வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. விவரங்களுக்கு, வேலூரில் இயங்கும் தமிழ் வளர்ச்சி துணை இயக்குநரை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!