Ranipet

News March 17, 2024

ராணிப்பேட்டை: தேர்தல் புகார்களை தெரிவிக்கலாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 04172-273190, 91,92,93 என்ற எண்களிலும் இலவச அழைப்பு எண்1800 425 7015 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான வளர்மதி தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

களமிறங்கியது தேர்தல் பறக்கும் படை குழு

image

சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் தருவதை தடுப்பதற்காக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் நேற்று அமைக்கப்பட்டது . அதைத் தொடர்ந்து இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பணியாற்றுவதற்கான குழுவினர் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நேற்று புறப்பட்டனர். அவர்களுடன் வீடியோ கேமரா மேன் மற்றும் போலீசார் சென்றனர்.

News March 16, 2024

ராணிப்பேட்டையில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது

image

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் விஜயராகவன், ராஜேந்திரன் முரளி, வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

ஆற்காடு: உழவர் ஆலோசனை மையம் திறப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி, கண்ணமங்கலம் கூட்ரோடு மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு உழவர் ஆலோசனை மையக் கட்டடத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று திறந்து வைத்தார்.

News March 16, 2024

அரக்கோணம்: மின்சாரம் தாக்கி பெண் பலி!

image

அரக்கோணம் அடுத்த அன்வர்த்திகான்பேட்டையை சேர்ந்தவர் ரமீசா(38). இவர் சொந்தமாக வீடு கட்டி வரும் நிலையில், இன்று கட்டுமான பணிக்காக தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது, மின் கம்பியில் தண்ணீர் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் ரமீசா காயமடைந்தார். அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். இருப்பினும் வழியிலேயே ரமீசா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 16, 2024

அரக்கோணம் அருகே மோப்ப நாய்களுக்கு பயிற்சி

image

அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரி குப்பத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு கட்டட இடிபாடுகளில் சிக்குபவர்களை மீட்பதற்கு 10 மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோப்ப நாய்களின் மோப்ப பயிற்சி மற்றும் அடிப்படை செயல்திறன் பயிற்சி இன்று நடைபெற்றது. கமாண்டன்ட் சைலேந்திரசிங், துணை கமாண்டன்ட் கோரக்சிங் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News March 16, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 43 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37 . கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!