Ranipet

News July 11, 2024

ராணிப்பேட்டையில் வேலைவாப்பு அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு நேர்காணல் மூலமாக, இடஒதுக்கீடு முறையில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பத்தை <>http://ranipet.nic.in<<>> என்ற இணையத்தில் பதவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 10, 2024

பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம்; 33 மனுக்கள் பெறப்பட்டன

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களிடமிருந்து 33 மனுக்கள் பெறப்பட்டன.

News July 10, 2024

ராணிப்பேட்டை: ரூ.3.42 கோடியில் நலத்திட்ட உதவிகள்

image

ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் கிராமத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் 174 பயனாளிகளுக்கு ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி எம்எல்ஏ, கோட்டாட்சியர் பாத்திமா, வட்டாட்சியர் ஸ்ரீதேவி, ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சௌந்தர், ஊராட்சி மன்ற தலைவர் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News July 10, 2024

ராணிப்பேட்டை அமைச்சரை சந்தித்த கலெக்டர்

image

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தியை திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு கலெக்டர்
ஆயூஷ்குப்தா இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கலெக்டர் அமைச்சருக்கு புத்தகம் வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்
உடனிருந்தார்

News July 9, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குறித்து ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூலை 11ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தலைமையில் துறைச்சார்ந்த அலுவலர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News July 9, 2024

மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் எஸ்.பி கிரண் ஸ்ருதி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கொலை, அடிதடி, திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முக்கிய வழக்குகளில் புலன் விசாரணை குறித்தும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்துபவர், விற்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

News July 9, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகள் மற்றும் பிற நீர்நிலைகள் கணிசமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 8, 2024

தொழில் நிறுவனங்களின் குறைதீர்க்கும் கூட்டம்

image

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில்மையத்தின் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீர்க்கும் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ் பி கிரண் ஸ்ருதி, தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், சுற்றுச்சூழல் செயல் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

News July 8, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஜூலை 9 முதல் 12 மற்றும் 15ஆம் தேதிகளில் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 04172291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News July 8, 2024

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் பணிபுரியும் பாதிரியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் பதிவுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் பெற்றுக்கொள்ளலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!