India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஜூலை 13) இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிக்குள்ளாக இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள 49 பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாளான வரும் ஜுலை-15 ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்படுகிறது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேற்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாவட்டத்தில் இன்று (13.07.2024) நடைபெறும் குரூப் I தேர்வினை 2,654 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வு மையத்திற்கு காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வருகை புரிய வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தாமதமாக வருபவர்கள் தேர்வு கூடத்திற்கு எந்த காரணத்தையும் கொண்டு அனுமதிக்கப்படமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் POCSO வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 1.காங்கேயன் என்பவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.5000 அபராதம் 2.விஜயலட்சுமிக்கு 18 மாதங்கள் கடுங்காவல் தண்டனை, ரூ.2500 அபராதம் என வேலூர் மாவட்ட POCSO நீதிமன்றத்தால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஜூலை 12) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிக்குள்ளாக இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையின் சார்பில் “ஒன்றிணைவோம்” என்ற தலைப்பின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தமிழ் பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் OSC சேவை மையத்தில் வழக்கு பணியாளர் மற்றும் மூத்த ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . விருப்பமுள்ளவர்கள் https://ranipet.nic.in/ என்ற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து மாவட்ட சமூக நலத்துறைக்கு தபால் மூலமாகவோ நேரிலோ 22-07-24 க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் போலீசார் சிப்காட்டிலுள்ள Thirumalai Chemicals Ltd தொழிற்சாலையில் உள்ள சுமார் 120 நபர்களுக்கு இணைய வழி குற்றங்களான Financial frauds, OTP frauds, EB bill payment frauds, Scholarship frauds, Investmentfrauds, Loan App frauds, Job Frauds, Part time Job frauds குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு இன்று வழங்கினர்.
இந்தியன் 2 திரைப்படம் நாளை(ஜூலை 12) ரிலீஸ் ஆகிறது. இப்படத்துக்கு கூடுதலாக சிறப்பு காட்சி நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளில் கூடுதல் காட்சி நடத்தப்படும்போது சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாத வண்ணம் அந்தந்த வட்டாட்சியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். போக்குவரத்து பாதிப்பு ஏதுமில்லாமல் இருப்பது அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான சிறப்பு முகாம் வரும் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமில் மனு செய்து பயன்பெறுமாறு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.