India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை நேற்று எச்சரிக்கை செய்தி வெளியிட்டது. அதில், “அதிக சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு என சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வரும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இளைஞர்கள் நம்பி ஏமாற வேண்டாம்; வேலைக்காக முன்பணம் எதுவும் கட்ட வேண்டாம்; இது தொடர்பாக 1930 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்” என தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் மழைக்காலத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் லோகநாயகி ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுதா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார். நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலாஜா ஊராட்சி ஒன்றியம் அனந்தலை ஊராட்சி பண்டித மாளவியா அரசு நிதி உதவி நடுநிலைப் பள்ளியில் இன்று தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 122-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் வளர்மதி உடன் இருந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகளின் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் (அ) தணிக்கை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். விண்ணப்பத்தை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட மேலாண்மை அலகு திட்ட இயக்குநருக்கு வரும் 19 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று முதல் காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்படுகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 49 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை அமைச்சர் ஆர்.காந்தி, வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தில் அமைந்துள்ள பண்டித மாளவியா அரசு நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், தற்போது கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பும் அபாயம் உள்ளது. எனவே பெற்றோர்கள் சிறுவர்களை ஏரி, குளம் மற்றும் நீர் நிரம்பிய பகுதிக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டு மைய அலுவலகத்தில் வரும் 19 ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதால்
இந்த வேலை வாய்ப்பு முகாமில் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அனுமதி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-1 தேர்வு நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை எழுத 2,654 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று நடந்த போட்டி தேர்வை 10 தேர்வு மையங்களில் மொத்தம் 1,840 பேர் எழுதினர். சுமார் 814 பேர் தேர்வு எழுத வரவில்லை. தொடர்ந்து, ராணிப்பேட்டை நவல்பூர் கிரேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.