India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அரக்கோணம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.எல்.விஜயன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முக்கிய பொறுப்பாளர்கள், கழகத் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நெமிலி தாலுகா சயனபுரத்தை சேர்ந்தவர் சீனு( 55). இவர் நேற்று இரவு சேந்தமங்கலம் நெமிலி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெமிலி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.
அரக்கோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இந்த தேர்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறு தேர்தலில் இருக்கக் கூடாது. எல்லா தகவல்களையும் தெளிவாக தேர்தல் பயிற்சி வகுப்பில் கற்றுக் கொள்ள வேண்டும். மறு தேர்தல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக மிகஅவசியம் என்றார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, அரக்கோணத்தில் பேராசிரியர் அப்சியா நஸ்ரின் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளரான வழக்கறிஞர் பாலு பொதுமக்களிடையே இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் வேட்பாளர் பாலுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் மாவட்ட காவல் தேர்தல் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குமார், குணசேகரன். துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு, வெங்கடேசன் அரக்கோணம் உட்கோட்டம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்
ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாறு அணைக்கட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (45 ). இவர் இன்று காலை மினி லாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார். லாடவரம் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகில் வரும்போது சாலை ஓரம் இருந்த பனைமரத்தில் நிலை தடுமாறி மினி லாரி மோதியதில் சுந்தரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என நேற்று(மார்ச் 21) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக வழக்கறிஞர் கே.பாலு அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு, புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.