India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் கரடிகுப்பம் சமுதாய கூடத்தில் இன்று(ஜூலை 18) மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் காந்தி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.78 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டிடங்களை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
மழைக்காலம் தொடங்கியுள்ளதை தொடர்ந்து மஞ்சள் காமாலை காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. குளோரின் கலந்த தண்ணீரையும் சுகாதாரமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தேவையற்ற பொருள்களில் தண்ணீர் தேக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி, சுகாதார வழிமுறைகளை கையாள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை புதிய பாலாறு பாலத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 19.07.24 முதல் 19.08.24 வரை ஒரு மாதத்திற்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை வரும் கனரக வாகனங்கள் விஷாரம் தெங்கால், காரை கூட்ரோடு மற்றும் வாலாஜாபேட்டை டோல்கேட் வழியாக வர வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கார், இருசக்கர வாகனங்கள் ஆற்காடு SSS கல்லூரி எதிர்புறமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து தலைமையாசிரியர்/முதல்வர் பரிந்துரையுடன் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டி நடைபெறும் நாளன்று அளித்து போட்டியில் பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ அல்லது -1 ஆகிய தளங்களில் விண்ணப்பிக்கலாம் நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று வெவ்வேறு பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்கவுள்ளார். அதன்படி ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய மூன்று பகுதிகளில் இன்று(18.07.24) நடைபெற உள்ள 09 நிகழ்ச்சிகளில் அமைச்சர் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பகுஜன் சமாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை கண்டித்தும் சிபிஐ விசாரணை நடத்தக்கோரியும் பகுஜன் சமாஜ், விடுதலை சிறுத்தை, தேமுதிக, நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி இந்திய குடியரசு என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக அவருடைய திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை 7 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி பூண்டிஊராட்சி தொடக்கப்பள்ளி, காவனூர் குப்பம்மாள் தாண்டவராயன் திருமண மண்டபம், ஆற்காடு தாழனூர் எஸ்.டி.எஸ் மஹால், கரடிகுப்பம் சமுதாயக்கூடம், தணிகைபோளுர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, காட்டுப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஓச்சேரி எஸ்.எஸ்.ஆர் மஹால் ஆகிய 7 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் எஸ்.பி கிரண் ஸ்ருதி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 8 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி தெரிவித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குணசேகரன், குமார், துணை காவல் கண்காணிப்பாளர் சீராளன் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.