Ranipet

News November 8, 2024

காட்டேரி கிராமத்தில் உள்ள நிலத்தில் ஆண் சடலம்

image

காட்டேரி கிராமத்தில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு இன்று தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரழந்தவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 8, 2024

கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி கார்த்தி (33) என்பவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை (ஆயுள் தண்டனை) மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தால்  நேற்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி. கிரண்ஸ்ருதி பாராட்டுகளை தெரிவித்தார்.

News November 8, 2024

ராணிப்பேட்டையில் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற பயிற்சி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் இடைநிலை,நிறுவன செயலாளர் இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் இடைநிலை ஆகிய போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணைய தளத்தின் மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News November 7, 2024

நவ.9ல் பொது விநியோகத் திட்டம் சிறப்பு முகாம் 

image

பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பர் மாதத்திற்கான சிறப்பு முகாம் நவ.9ஆம் தேதி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மக்கள் தங்கள் குறைகளை இந்த சிறப்பு முகாமில் மனு அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 7, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 7, 2024

உழவர் சந்தையில் பேவர் பிளாக் அமைக்க அமைச்சர் உத்தரவு

image

ராணிப்பேட்டை உழவர் சந்தை எதிரில் நெடுஞ்சாலையோரம் உழவர் சந்தைக்கு வருகைத்தரும் மக்கள் வாகனம் நிறுத்திட பேவர் பிளாக் அமைத்து போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் செய்திடுவது குறித்து அமைச்சர் காந்தி அவ்விடத்தினை பார்வையிட்டு பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் உடன் இருந்தனர்.

News November 7, 2024

கோரிக்கை விடுத்த ராணிப்பேட்டை அதிமுக மாவட்ட செயலாளர் 

image

ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாலாஜா பேருந்து நிலையக் கட்டிட பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருவதாகவும்,மது பிரியர்கள் இங்கு வந்து மது அருந்திவிட்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்வதால் பேருந்து நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (06.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 6, 2024

ராணிப்பேட்டை எஸ்பி விழிப்புணர்வு

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி அவர்கள் தமது சமூக ஊடக தளங்களில் போதைப்பொருட்கள் உங்கள் பணத்தை மட்டுமல்லாமல் உங்கள் வாழ்க்கையையும் வீணாக்குகின்றன. (SAY NO TO DRUGS) போதைப்பொருள் வேண்டாம் என்று சொல்லுங்கள்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை கருப்பொருளாக கொண்டு போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் தங்கள் மனதில் பதிவுசெய்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

image

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் வரும் நவ.10 தேதி ராணிப்பேட்டையில் உள்ள NRK திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக நகர ஒன்றிய பேரூர் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் எஸ்.எம் சுகுமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!