India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜூலை 07)இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் இன்று (ஜூலை-7) வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, லாட்டரி மற்றும் வெற்றி அழைப்புகள் (Prize Winning Call) போன்றவற்றை உண்மை என நம்பி பணம் கொடுக்கும் மக்கள் மோசடிக்கு ஆளாகக்கூடும். இந்த வகை கைபேசி அழைப்புகள் மூலம் பணம் வற்புறுத்தும் மோசடி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சைபர் மோசடியில் சிக்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா, மாற்றுத்திறனாளிகள் வழங்கிய மனுக்களை பெற்று அவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். மனுக்களில் கூறப்பட்ட பிரச்னைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
சோளிங்கர் பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களை தடுக்க, 24 மணி நேரம் ரோந்து பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் தலைமை தாங்கினார். 24 மணி நேர மோட்டார்சைக்கிள் ரோந்து பணியை தாசில்தார் செல்வி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரோந்து பணி காவலர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்திய கடற்படையில் உள்ள குரூப்.பி மற்றும் குரூப்-சி பிரிவில் உள்ள சார்ஜ்மேன், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது 18 முதல் 45 வரை இருக்கலாம். 10th முதல் பொறியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 18,000- 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள்<
சோளிங்கர் பகுதியில் உள்ள தகரக்குப்பத்தை சேர்ந்த சந்தியா, மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த கிஷோர், சோளிங்கர் பகுதியை சேர்ந்த சரிகா, ரக்சா, லட்சுமி, ராஜேஷ் ஆகிய 6 கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி சோளிங்கர் தொகுதி முனிரத்தினம் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர். அதன்பேரில் அவர் தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் 6 பேருக்கும் ரூ.60 ஆயிரத்துக்கான காசோலைகளை நேற்று வழங்கினார்.
லாலா பேட்டை உழவர் சந்தையில் இன்று ( ஜூலை-07) காய்கறி விலை ஒரு கிலோவில் தக்காளி ரூ.28, உருளை ரூ.28, சின்ன வெங்காயம் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.28, மிளகாய் ரூ.45, கத்திரிக்காய் ரூ.35, வெண்டை ரூ.40, முருங்கை ரூ.50, பீர்கங்காய் ரூ.35, சுரக்காய் ரூ.15-20, புடலங்காய் ரூ.25, பாகற்காய் ரூ.45-50, தேங்காய் ரூ.15-30, முள்ளங்கி ரூ.30, பீன்ஸ் ரூ.56-80, அவரை ரூ.58, கேரட் ரூ.42 என விற்பனை செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டை உழவர் சந்தையில் இன்று (ஜூலை7) காய்கறி விலை (1kg) தக்காளி ரூ.25-27, உருளை ரூ.28-32, சின்ன வெங்காயம் ரூ.55-60, பெரிய வெங்காயம் ரூ.25-27, கத்திரிக்காய் ரூ.35-40, வெண்டை ரூ.40, முருங்கை ரூ.45-50, சுரக்காய் ரூ.15-20, புடலங்காய் ரூ.25, பாகற்காய் ரூ.50-60, பீர்கங்காய் ரூ.25-35, தேங்காய் ரூ.25-30, முள்ளங்கி ரூ.25-30, பீன்ஸ் ரூ.55-80, அவரை ரூ.55, கேரட் ரூ.40-60 என விற்பனையாகிறது
தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் இந்த லிங்கில் உள்ள <
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
Sorry, no posts matched your criteria.