India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘மக்களுடன் முதல்வர்’ (ஊரகம்) திட்ட சிறப்பு முகாம்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம், ஆற்காடு, திமிரி, சோளிங்கர், வாலாஜா, அரக்கோணம் மற்றும் நெமிலி ஆகிய 7 வட்டாரங்களில், 15 துறைகளை ஒருங்கிணைத்து வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி மகிழ்ச்சி அடைந்தார். இதில் பள்ளி நிர்வாகத்தினர், அரசு துறை அதிகாரிகள் என பலர் உடன் இருந்தனர்.
நெமிலி தாலுகாவில் ’உங்களை தேடி உங்கள் ஊர்’ திட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று காலை நெமிலி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் உணவு வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் தட்டு, டம்ளர் பாத்திரங்கள் ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உடன் இருந்தார்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 44 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை நடைபெற உள்ளது. அதன்படி வி.சி.மோட்டூர் சமுதாயக்கூடம், தாஜ்புரா எம்.என் மஹால், மருதாலம் கூட்ரோடு சாந்தி ஆனந்தன் திருமண மண்டபம், காவனூர் குப்பம்மாள் தாண்டவராயன் திருமண மண்டபம், ஓச்சேரி எஸ்.ஆர்.ஆர் மண்டபம், அரக்கோணம் கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, மகேந்திராவாடி அரசு பள்ளி ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடுத்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகன உறுபத்தி தொழிற்சாலை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஆகஸ்ட் மாதாம் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், 5000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடம் புகார் மனுவாக 42 மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுக்கிறார். 5 ஆண்டுகளில், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஜாகுவார், லேண்டர் ரோவர் கார்களை தயாரிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா நேற்று நெமிலி வட்டத்தில் ஆய்வு செய்தார். அதில் பனப்பாக்கம் அருந்ததிபாளையம் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், மையத்திற்கு வருகை புரியும் குழந்தைகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உணவு தயார் செய்ய வேண்டும். வருகை புரியாத குழந்தைகளை பதிவேட்டில் பதிவு செய்து கணக்கு காட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சந்திரகலா நேற்று பனப்பாக்கம் பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் 135 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். உடன் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், செயல் அலுவலர் குமார் மற்றும் பலர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.