India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆற்காடு அடுத்த மோசூர் கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. திமிரி போலீசார் இரு தரப்பினரிடம் புகார் பெற்று ராணுவ வீரர், அரசு சித்த மருத்துவ உதவியாளர், ஊர் நாட்டாமைக்காரர் என 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த 9 பேரும் தலைமறைவாக உள்ளனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் பாறைமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஓம்பிரகாஷ், கருத்து வேறுபாடு காரணமாக எழுந்த முன்விரோதத்தில் மனைவி சந்தியாவை, மாமியார் வீட்டில் வைத்து கத்தியால் வெட்டி இன்று கொலை செய்துள்ளார். கொலை செய்த ஓம்பிரகாஷை கைது செய்த பானாவரம் போலீசார், சம்பவம் குறித்து நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
ஆற்காடு பகுதியில் உள்ள ஆற்காடு நகர பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆற்காடு நகர பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவது மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலெக்டர் சந்திரகலா, எஸ்பி கிரண்ஸ்ருதி, ஆர்டிஓ பாத்திமா, திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகராட்சி தலைவிகள் சுஜாதா (ராணிப்பேட்டை), ஹரிணி (வாலாஜா), தமிழ்செல்வி (சோளிங்கர்), தேவி (ஆற்காடு), லட்சுமி (அரக்கோணம்) என்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் 90 % பெண்கள் ஆட்சி செய்து வருகின்றனர்.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி ராணிபேட்டை கிழக்கு மாவட்டத் தலைவராக மோகன்காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அரக்கோணம், சோளிங்கர் இரு தொகுதிகளை உள்ளடக்கி ராணிபேட்டை கிழக்கு மாவட்டமாகவும், ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிகளை உள்ளடக்கி மேற்கு மாவட்டமாகவும் பிரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை எதிரே ஹூமாயூன் மஹால் கட்டிடத்தில் சுமார் 80 ஆயிரம் சதுர அடி பரப்பில் சுதந்திர தின அருங்காட்சியம் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைத்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. எனவே பொது மக்கள் தங்கள் சேகரித்து வைத்துள்ள சுதந்திரம் போராட்டம் தொடர்பான பொருட்களை நன்கொடையாக அளிக்கலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூலை 31ஆம் தேதி காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இந்த
கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் வேளாண் தோட்டக்கலை, மின்வாரியம், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பலத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
‘மக்களுடன் முதல்வர்’ (ஊரகம்) திட்ட சிறப்பு முகாம்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம், ஆற்காடு, திமிரி, சோளிங்கர், வாலாஜா, அரக்கோணம் மற்றும் நெமிலி ஆகிய 7 வட்டாரங்களில், 15 துறைகளை ஒருங்கிணைத்து வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி மகிழ்ச்சி அடைந்தார். இதில் பள்ளி நிர்வாகத்தினர், அரசு துறை அதிகாரிகள் என பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.