Ranipet

News July 28, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்க்கு இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட், தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 7 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 28, 2024

வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல் அரசு

image

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு சீட் திட்டம் சார்பில் நிலம், வீடு மற்றும் வீடுகள் கட்ட நிதி உதவி வழங்குதல் சுகாதாரம் கல்விக்கான அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் பயனடைய விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

அரக்கோணம் கடற்படை தளத்தின் பிரம்மிப்பு

image

அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்தில் உள்ள விமான ஓடுபாதை 4,500 மீட்டர் நீளமுள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது நீளமான ஓடுபாதையாகும். மேலும் இது ஆசியாவின் இரண்டாவது கடற்படை பெயிற்சி மையமாகும்.

News July 28, 2024

அரக்கோணத்தில் இன்று கண் சிகிச்சை முகாம்

image

அரக்கோணம் இந்திய கடற்படை நகர லயன்ஸ் சங்கம் ஜாமியா & ஈத்கா மஸ்ஜித் அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் அரக்கோணம் அந்-நூர் கண் மருத்துவமணை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று அரக்கோணம் கனரா பேங்க் அருகில் ஜாமியா கம்யூனிட்டி ஹாலில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. கண் எரிச்சல், கருவிழி பரிசோதனை, கிட்ட பார்வை. தூரப்பார்வை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

News July 28, 2024

பார்வையற்ற மாணவனுக்கு அதிமுக உதவி

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் லப்பைபேட்டை பகுதியைச் சேர்ந்த பார்வையற்ற மாணவன் எஸ்.கீர்த்திவாசனுக்கு, அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு எஸ்.எம்.சுகுமார் தனியார் கண் மருத்துவமனையில் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தார். தனது சொந்த செலவில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் கிளாஸ் கண்ணாடி வழங்கினார்.

News July 28, 2024

சுற்றுச்சூழல் துணைச்செயலாளரை சந்தித்த திமுக நிர்வாகி

image

ராணிப்பேட்டை திமுக மாநில சுற்றுச்சூழல் அணியின் துணைச்செயலாளர் வினோத் காந்தியின் இல்லத்தில், குடியாத்தம் நகர கழக திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் டிசைனர் பாலாஜி நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதில் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

News July 27, 2024

எம் பி யை வரவேற்ற ராணிப்பேட்டை அமைச்சர்

image

ராணிப்பேட்டையில் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு வருகை புரிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பட்டு வேட்டி அணிவித்து நேரில் வரவேற்றார்

News July 27, 2024

ராணிப்பேட்டையில் போலீஸ் கவாத்து பயிற்சி

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆயுதப்படை தலைமையகத்தில் இன்று போலீசாருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியின்போது போலீசார் தங்களது உடல் தகுதி திறனை நிரூபிக்கும் வகையில் உடற்பயிற்சிகள் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி போலீசாரின் உடல் தகுதித் திறனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .டிஎஸ்பி வெங்கடேசன் உடன் இருந்தார்

News July 27, 2024

இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

image

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் R. காந்தி தலைமையில், ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு எந்தவித திட்டத்தையும் அறிவிக்காத பாஜக அரசை கண்டித்து இன்று காலை 10:00 மணிக்கு ராணிப்பேட்டை முத்து கடையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்

News July 26, 2024

ராணிப்பேட்டையில் ஆய்வுக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ஆற்காடு, வாலாஜா, கலவை, சோளிங்கர், நெமிலி என மொத்தம் 6 தாலுகா உள்ளது. இந்த தாலுகாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருக்கின்றனர். தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டு ஒப்புதல் அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

error: Content is protected !!