Ranipet

News November 20, 2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா இன்று ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோனில் சீலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். உடன் தேர்தல் வட்டாட்சியர் செல்வி. வசந்தி, ஆற்காடு வட்டாட்சியர் பாக்கியலட்சுமி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இருந்தனர்.

News November 20, 2024

கோவை டபுள் டக்கர் பிருந்தாவன் ரயில்கள் தாமதம்

image

சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் பராமரிப்பு பணிகள் குறித்த நேரத்தில் முடியாத காரணத்தினால் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்திற்கு மூன்று மணி நேரம் கால தாமதமாக வந்தது. அதேபோன்று ஏசி டபுள் டக்கர் மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டரை மணி நேரம் கால தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

News November 20, 2024

ராணிப்பேட்டை அருகே நாளை மின்தடை 

image

அரக்கோணம் கோட்டத்தைச் சேர்ந்த இச்சிப்புத்தூர் மற்றும் பள்ளூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (21-11-2024)மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. இச்சிப்புத்தூர்,தணிகை,போளூர்,திருமால்பூர்,சயனபுரம், சேந்தமங்கலம்,வாணியம்பேட்டை, தண்டலம், உளியம்பாக்கம், வளர்புரம், ஈசலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

ராணிப்பேட்டை அருகே வாகனங்களுக்கு அதிக கட்டணம்

image

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் கோயிலில் கார்த்திகை மாதம் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு நகராட்சி ஒப்பந்ததாரர் அதிக கட்டண வசூல் செய்வதால் பக்தர்கள் அவதிக்கு ஆளாகின்றனர். கோயிலுக்கு வரும் கார்களுக்கு வாகன நிறுத்த கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.எப்போதும் 30 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் மட்டும் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

News November 19, 2024

இரவு ரோந்து பணியில் விவரங்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (19.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

News November 19, 2024

திமுக மகளிர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டையில் திமுக மகளிர் மற்றும் தொண்டரணி, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்து அறிவிப்புகள் வெளியிட்டப்பட்டது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் அமைச்சர் காந்தி வழிகாட்டுதலின்படி புதிய நிர்வாகிகளுக்கு திமுக மகளிர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விசுவாசம் பள்ளி நிறுவனர் கமலஹாந்தி கலந்து கொண்டார்.

News November 19, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 22ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பி.இ. படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

“அண்ணா பதக்கம்” விண்ணப்பங்கள் வரவேற்பு

image

வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” பெற தகுதியுடையோர் வரும் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். மேலும் விருதுக்கான விண்ணப்பங்களை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் நாள் கூட்டம் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கு கூட்டம் வரும் வியாழக்கிழமை (நவ. 21) காலை 11 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார். இதில், மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

News November 18, 2024

ரோந்து போலீசாரின் விவரங்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.

error: Content is protected !!