India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை, நாகவேடு அடுத்த பருத்திப்புத்தூர் கிராமம் அருகே இன்று (நவ.04) காலை 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர். புதிய தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள உயரமான வேகத்தடையில் மோதி விபத்துக்குள்ளானார். தலைக்கவசம் அணியாததால் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. பின் அவ்வழியே வந்தவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ராணிப்பேட்டையில் மட்டும் 31 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திராவிட முன்னேற்றக் கழக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நேற்று (நவ.03) நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். பின் அமைச்சர் காந்தி, எம்.பி.ஜெகத்ரட்சகன், ஆற்காடு MLA ஈஸ்வரப்பன் உடன் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 248 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டம் நேற்று (நவ.03) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைத் துறை, நில எடுப்பு) கௌசல்யா பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கேட்டறிந்தார். பின் மனுக்களை துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

பெருமாள்ராஜபேட்டை ஆர்.என். கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஹரி வெங்கடேஷ் 65 இவர் இன்று நவம்பர் 3ம் தேதி அங்குள்ள விநாயகர் கோயில் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார் அவரை உறவினர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஹரி வெங்கடேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 முக்கிய தினங்கள் குறித்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் வீடுவீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி இன்று நவ.4 முதல் டிச.4 வரை, பெயர்களை சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவித்தல் டிச.9 முதல் ஜன.8,2026 வரை, இறுதி வாக்காளர் பட்டியல் 7.2.2026 அன்று வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ-03) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.3) இராணிப்பேட்டை மாவட்டத்தில் 43.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 115 திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின்னர், 24.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 72,880 பயனாளிகளுக்கு 296.46 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.