India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சோளிங்கர் அடுத்த ஜோதி மோட்டூரை சேர்ந்தவர் சம்பத் மகன் செல்வம் (24). இவருக்கு திருமணமாகி 45 நாட்கள் ஆகிறது. இன்று காலை செல்வம் கரிக்கல்லிருந்து கிருஷ்ணாபுரம் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிரே வந்த லாரி பைக் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (27-11-2024) மாவட்ட மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், பேங்கிங் மற்றும் மெசேஜிங் போன்ற முக்கியமான ஆப்ஸைப் பாதுகாக்க ஆப்ஸ் லாக் அம்சங்களைப் பயன்படுத்தவும் என வாசகம் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு வெளியிடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 32 விற்பனையாளர் பணியிடங்களுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதில், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நாளை மறுநாள் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட் அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது என கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று புயலாக இன்று மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராணிப்பேட்டை மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் சினிமா திரைப்பட நடிகர் கரண் இன்று தனது மனைவி உடன் சுவாமி தரிசனம் செய்தார். மலை அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலை கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பொது மக்கள் நடிகர் கரண் உடன் போட்டோ எடுத்து கொண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை பேசின் பிரிட்ஜ் வியாசர்பாடி இடையே பாலம் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் காட்பாடி வழியாக இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் 40 நிமிடங்கள் காலதாமதமாகவும், சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள் காலதாமதமாகவும் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை (நவ.27) புயலாக உருமாற உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் 33 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு தினத்தை ஒட்டி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இந்திய அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழி அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர். இதில் ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக வரும் 28 ஆம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, கள விசாரணையின் அடிப்படையில் வாக்காளா் பட்டியலில் பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜன.6 ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
Sorry, no posts matched your criteria.