India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.28) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

சோளிங்கர் கொண்டபாளையத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மாதம் யோக நரசிம்மர் கண் திறந்த நிலையில் இருப்பார் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவர். அதேபோன்று இந்த ஆண்டும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இந்நிலையில் இன்று சோளிங்கர் பகுதியில் பலத்த காற்று வீசிய நிலையில் ரோப் கார் சேவை திடீரென 4 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ஆம் தேதி காலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும். இதன் காரணமாக, நாளை ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் கனமழையும், வரும் 30ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் எச்சரித்துள்ளார்.

சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூபாய் 5.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஊராட்சி ஒன்றியம் அலுவலக கட்டுமான பணிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் குறை தீர்வு முகாம் நேற்று (நவ-27) எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமையில் நடந்தது. இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து சீட்டு மோசடி, நில அபகரிப்பு, கடன் பிரச்னை, வரதட்சணை பிரச்னை என பல்வேறு பிரச்னைகள் அடங்கிய 37 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி கிரண் ஸ்ருதி தெரிவித்தார்.

நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை (29ம் தேதி) காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்னைகளை மனுக்களாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் சின்னம் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக ராணிப்பேட்டை சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டக்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணிப்பேட்டை நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இராஜேஸ்வரி திரையரங்கம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பில் உயர்தர மின்கம்பங்களுடன் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர்,அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு. சந்திரகலா நேற்று வாலாஜா ஊராட்சி ஒன்றியம் மணியம்பட்டு ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தில் ரூ.86 ஆயிரம் மதிப்பீட்டில் பயனாளியான மஞ்சுளா என்பவரின் வீடு சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார் சரவணன்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
Sorry, no posts matched your criteria.