Ranipet

News April 26, 2024

ராணிப்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து விபத்து

image

காஞ்சிபுரத்திலிருந்து இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு, அரக்கோணம் நோக்கி இன்று(ஏப்.26) காலை லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. பரமேஸ்வர மங்கலம் அருகே வரும்போது நிலை தடுமாறிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பின்னால் வந்த காரும் லாரியின் பின்பக்கம் மோதி விபத்தில் சிக்கியது. இதில் 2 பேர் லேசான காயமடைந்தனர். தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 25, 2024

ராணிப்பேட்டை: குழந்தைகளின் தந்தை குளத்தில் விழுந்து சாவு

image

ராணிப்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் தயாளன்( 46 ).இவர் இன்று சென்னசமுத்திரத்தில் உள்ள தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது அருகில் உள்ள குளத்தில் விழுந்து இறந்தார் . இதுகுறித்து வாலாஜா போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு தயாளனின் உடல் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு திலீபன் ,தேவிகா என 2 குழந்தைகள் உள்ளனர்.

News April 25, 2024

மகேந்திரவாடி குடைவரை கோயில் சிறப்பு!

image

அரக்கோணம் அருகே மகேந்திரவாடியில் அமைந்துள்ளது மகேந்திர விஷ்ணுகிருகம் என்னும் குடைவரைக்கோவில். இது தமிழகத்தில் உள்ள குடைவரைகளில் மிகவும் பழமையானது. கிபி. 600 – 630ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்டது. மகேந்திர பல்லவன் என்ற பெயரும் இதில் பொரிக்கப்பட்டுள்ளது. சிறிய பாறையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இரு முழு தூண்களும், இரு அரை தூண்களும் உள்ளன.

News April 25, 2024

ராணிபேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

ராணிபேட்டை மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் ராணிபேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ராணிபேட்டை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

விவசாயிகளுக்கு கலெக்டர் அட்வைஸ்

image

கோடை காலத்தை முன்னிட்டு தற்போது நிலவும் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் பற்றாக்குறையை சமாளிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கோடைகாலத்தில் குறைவான நீர் பயன்படுத்தும் நெல்லுக்கு மாற்று பயிரான கம்பு, சோளம், ராகி, எள், பச்சைப்பயறு, காராமணி உள்ளிட்ட பயிர் வகைகளை பயிர் செய்து பயனடையுமாறு ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

image

அரக்கோணம் அடுத்த கடம்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்திஷ்( 19). இவர் இன்று பைக்கில் தக்கோலம் கூட்ரோடு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி நித்திஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

குடிநீர் சொத்து வரி விரைந்து வசூலிக்க வேண்டும்

image

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தடையில்லா குடிநீர் வழங்குவது குறித்த அனைத்து துறை அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கலந்து கொண்டு நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் தடையில்லா குடிநீர் வழங்க வேண்டும் மேலும் குடிநீர், சொத்து வரி நிலுவை இல்லாமல் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திட்ட இயக்குனர் லோகநாயகி கலந்து கொண்டார்.

News April 25, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

கலவை அருகே ஃபிரிட்ஜ் எரிந்து விபத்து!

image

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா, மேல்நெல்லி கிராமம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ரோஸ்(45). இவரது வீட்டில் இன்று(ஏப்.24) அதிகாலை 3 மணிக்கு மின் கசிவு காரணமாக ஃப்ரிட்ஜ் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், அருகில் இருந்த 3 மூட்டை வேர்க்கடலை மற்றும் ரூ.3,000 ரொக்கம் எரிந்து சேதமானது. கலவை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

News April 25, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் திடீர் ஆய்வு

image

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 5 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று(ஏப்.23) இரவு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வளர்மதி திடீர் ஆய்வு செய்து அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார். மேலும் அங்கிருந்த போலீசாரிடம் மிக விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!