India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆற்காடு தாலுகா சாத்தூர் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன்(35). இவருக்கும், இவரது தம்பிகளுக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை சரவணன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடலை ஆற்காடு தாலுகா போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்டத்தில் 90.27% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 85.30 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 93.76% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா முள்ளுவாடி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன்(45). இவர் நேற்று(மே 5) இரவு கலவை கூட்ரோட்டில் இருந்து முள்ளுவாடி ஏரிக்கரை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கலவை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோளிங்கரில் உள்ள திருத்தணி சாலையில் குறுகிய வளைவில் கண்டெய்னர் லாரி திரும்பிய போது, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ் உரசியது. இதனால் லாரி டிரைவர் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து லாரி டிரைவர் மீது அரசு பேருந்து ஓட்டுநர் நேற்று(மே 5) போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
சோளிங்கர், புலிவலம் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள வித்யா பீடம் பள்ளியில் நீட் தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சோளிங்கர் வட்டாட்சியர் ஆனந்தன் இன்று ஆய்வு செய்தார். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்றும் பார்வையிட்டார்.
அரக்கோணம் அடுத்த புளியமங்கலத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் இரு குழுக்களாக பிரிந்து ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். நேற்று இரவு அரக்கோணம் புளியமங்கலத்தைச் சேர்ந்த ரகுபதி , கீழ்ப்பாக்கம் சீமியோன் ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டது சீமியோன் ரகுபதியை அடித்து கீழே தள்ளியதில் தண்டவாளத்தில் உள்ள ஜல்லிக்கற்கள் தலையில் குத்தி படுகாயம் அடைந்தார் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்கும் வகையில் அரக்கோணம் நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைச்சல் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதார அலுவலர் மோகன் தலைமை வகித்தார். இதில் பலர் உடன் இருந்தனர்.
வாலாஜா தாலுகா தகரகுப்பம் அடுத்த ஒட்டனேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக சோளிங்கர் போலீசாருக்கு தொடர்ந்து புகார் சென்றது. நேற்று சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் அப்பகுதியில் திடீர் ரெய்டு நடத்திய போது அதே பகுதியைச் சேர்ந்த விஜயா( 60) என்பவர் வீட்டில் 18 லிட்டர் கள்ள சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
வாலாஜா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாதுகாப்பு அறைகள் நல்ல நிலையில் உள்ளதா என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தேர்தல் அலுவலருமான வளர்மதி, காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆகியோர் இணைந்து இன்று பார்வையிட்டு அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
வாலாஜா தாலுகா சுமைதாங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை காவேரிப்பாக்கம் பெரிய கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை(58) கட்டடத்திற்கு தண்ணீர் ஊற்றுவதற்காக, அருகில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து பலியானார். காவேரிப்பாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.