Ranipet

News December 2, 2024

51 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப் பணித்துறை மற்றும் ஊராட்சி நிா்வாகக் கட்டுப்பாட்டில் மொத்தம் 369 ஏரிகள் உள்ளன. இதில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாள்களில் பெய்த கன மழையால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 51 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

புயல் மழையால் சுமார் 460 ஏக்கா் பயிா்கள் மூழ்கி சேதம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புயல் காரணமாக சுமார் 325 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்களும், 36 ஹெக்டேர் பரப்பளவில் உளுந்து பயறும், 67 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை பயறும் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. மேலும் 32 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்களான காய்கறி செடிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News December 2, 2024

ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News December 1, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச 01) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில்  ஈடுபடும் போலீசார் விவரங்களை, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News December 1, 2024

மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்

image

கைத்தறி துறை அமைச்சர் காந்தி இன்று (டிசம்பர் 1) வெளியிட்ட அறிக்கையில்,  ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை டிச 2-ம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறும். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டைக்கு வரும் 6-ம் தேதி  வருகை  குறித்தும், கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News December 1, 2024

மின்சாரம் தாக்கி ஏழாம் வகுப்பு மாணவன் பலி

image

அரக்கோணம் விண்டர்பேட்டை சேர்ந்தவர் சபீர், இவரது மகன் ரிஸ்வான் (12) தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று மதியம் லைட் போடுவதற்காக தனது வீட்டில் சுவிச்சை போட்டுள்ளார். கனமழையால் வீட்டின் சுவர் மழையில் ஊறிய நிலையில் மின் கசிவு ஏற்பட்டு, ரிஸ்வான் உடலில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்த  நிலையில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

News December 1, 2024

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (டிச.2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News December 1, 2024

நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் கலெக்டர் அறிவுறுத்தல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் கரையினை கடந்து சென்றாலும் இன்று மாவட்டத்தில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள் மின்கம்பம் மின்சாரம் ஒயர்கள் செல்லும் இடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவித்துள்ளார்.

News December 1, 2024

பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்கள், ஆறுகள் மற்றும் தரைப்பாலங்கள் கனமழையின் காரணமாக நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சிறியவர்கள் யாரும் இறங்கவோ அல்லது விளையாடவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

News December 1, 2024

ராணிப்பேட்டையில் வெளுத்து வாங்கிய கனமழை

image

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த காற்று வீசியதால், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில், மழைநீர் தேங்கியது. வாலாஜாபாத் அருகே பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் அரசு பேருந்து ஒன்று சாய்ந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. உங்கள் பகுதியில் மழையா?

error: Content is protected !!