India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று (14-08-2024) 28 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிரண்சுருதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். மொத்தம் 28 பேர் மனுக்கள் கொடுத்தனர். இதில் சீட்டு பணம் மோசடி, வேலை வாங்கி தருவதாக மோசடி, காதல் திருமணம் செய்து சேர்ந்து வாழாதது என்று பல்வேறு மனுக்கள் தரப்பட்டன.
அரக்கோணம், மகேந்திரவாடியில் அமைந்துள்ள மகேந்திர விஷ்ணுகிருகம் என்னும் குடைவரை ஓர் வரலாற்றுச் சின்னமாக இருக்கிறது. இது கி.பி.600 முதல் 630-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட குடைவரையாகும். எனவே அவரின் பெயராலே மகேந்திர விஷ்ணுகிருகம் என்று அழைக்கப்படுகிறது. வெட்டவெளியான ஓர் இடத்தில் தனியாக ஒரு சிறுபாறையை குடைந்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். சேர் செய்யவும்
அரக்கோணம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது குழந்தை நிர்மல் (4). கடந்த ஜூன் 27ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த நிர்மலை தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார். ரேபிஸ் நோய் தாக்கியதால் உடலை வீட்டிற்கு எடுத்து வராமல் நேரடியாக இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக நாகர்கோவில் செல்லும் ரயிலில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மதியனூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி ரோனிகா பயணம் செய்தனர். அவர்களுக்கு 3 ஆண்கள் மயக்க டீ கொடுத்து அவர்களிடமிருந்து தாலி கம்பல் கொள்ளையடித்து சென்றனர். அரக்கோணம் அருகில் வந்த நிலையில் மயக்கம் தெளிந்ததால் 2 பேரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோன்று அரசு உரிமம் பெற்ற பார்களுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சியில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாவட்ட முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 476 காவலர்கள், துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தகவல் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் காலை 11 மணிக்கு அந்தந்த ஊராட்சிகளில் நடத்த வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், கிராம சபை கூட்டத்தில் கிராமங்களில் சுத்தமான குடிநீர், இணைய வழியில் வரி செலுத்துதல், சுற்றுப்புற தூய்மை, சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒப்பிடும்போது, தமிழகத்தில் இயல்பைவிட 91% அதிக அளவில் மழை பெய்துள்ளது. குறிப்பாக, ராணிப்பேட்டையில் கடந்தாண்டு (ஜூன் – ஆகஸ்ட் ) 22% மழை பெய்த நிலையில், இந்தாண்டு 57% மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில் மழை பெய்கிறதா?
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் சோளிங்கர் பகுதியை சேர்ந்த பச்சைகான்(79) என்பவர் அளித்த மனுவில், கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பித்த போது தான் இறந்துவிட்டதாக பதிவாகியுள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் அதை சரி செய்யவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், தனக்கு உதவித்தொகை வழங்கமாறு குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.