Ranipet

News May 12, 2024

ராணிப்பேட்டை: மாணவியை நேரில் அழைத்து பாராட்டு 

image

ராணிப்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த அரக்கோணத்தை சேர்ந்த தஸ்னிம் என்ற மாணவியை நேரில் அழைத்து பாராட்டினார். இதில் அரக்கோணம் நகர மன்ற தலைவர் லஷ்மி பாரி , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் ச.பிரகாஷ் உடன் இருந்தனர்.

News May 12, 2024

அரக்கோணம் ரயிலில் 8 சவரன் செயின் பறிப்பு

image

சென்னை ஆவடியை சேர்ந்தவர் அபிராமி (35). இவர் தனது அக்கா மற்றும் குழந்தைகளுடன் திருத்தணியில் சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து ஆவடிக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார். ரயில் நேற்று இரவு 9.20 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக நிற்கும்போது மர்ம நபர் ஒருவர் திடீரென அபிராமி கழுத்தில் இருந்த 7 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பித்து ஓடினார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரிகின்றனர்.

News May 12, 2024

ராணிப்பேட்டை: போக்சோவில் சிக்கிய பாதிரியார்

image

ராணிப்பேட்டை, ஏரி தெருவில் சர்ச் நடத்தி வரும் பாதிரியார் ரகுராஜ்குமார்(54). கடந்த ஆண்டு டிசம்பரில் சர்ச்சுக்கு வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்த நிலையில், பாதிரியார் தலைமறைவானார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

News May 11, 2024

ராணிப்பேட்டை: போக்சோவில் சிக்கிய பாதிரியார்

image

ராணிப்பேட்டை, ஏரி தெருவில் சர்ச் நடத்தி வரும் பாதிரியார் ரகுராஜ்குமார்(54). கடந்த ஆண்டு டிசம்பரில் சர்ச்சுக்கு வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்த நிலையில், பாதிரியார் தலைமறைவானார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

News May 11, 2024

ராணிப்பேட்டை: திடீர் ஆய்வு செய்த எஸ்பி!

image

ராணிப்பேட்டை மாவட்ட தலைமை ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி கலந்துகொண்டு போலீசாரின் உடல் தகுதி திறனை சோதிக்கும் வகையில் நடந்து கொண்டிருந்த உடற்பயிற்சியை திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏடிஎஸ்பிகள் சரவணன், குணசேகரன் , குமார் அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

News May 11, 2024

ராணிப்பேட்டை: ஜூலை 2-ல் துணைத் தேர்வு?

image

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று(மே 10) வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று(மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 11, 2024

சோளிங்கர் அரசு கல்லூரியில் சேர உதவி மையம்

image

சோளிங்கர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவிகள் முதலாமாண்டு சேர்வதற்கு வசதியாக மே 6 முதல் 20 ஆம் தேதி வரை உதவி மையம் செயல்படுகிறது. சேர விரும்பும் மாணவர்கள் இங்கு நேரில் வந்து விவரத்தை அறிந்து கொள்ளலாம். இந்த உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று கல்லூரி முதல்வர் பொறுப்பு சுஜாதா தெரிவித்துள்ளார்.

News May 10, 2024

வங்கி மேலாளர் தூக்கு மாட்டி தற்கொலை

image

கேரளாவை சேர்ந்தவர் கிஷோர்(40). இவர் அரக்கோணம் யூனியன் வங்கி மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தீபா காஞ்சிபுரம் ஐஓபி வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிகிறார். இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் அரக்கோணம் ஜவகர் நகர் பகுதியில் வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று கிஷோர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அரக்கோணம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்

News May 10, 2024

ஊராட்சி மன்ற தலைவர் இயற்கை எய்தினார்

image

இராணிப்பேட்டை மாவட்ட திமுக பிரதிநிதி சீனிவாசன் என்பவரின் தந்தையும் தென்கடப்பதாங்கல் ஊராட்சி மன்ற தலைவருமான  பிச்சமணி இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஆர். காந்தி அவர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

News May 10, 2024

ராணிப்பேட்டை 34ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 82.21% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 74.62 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 89.21 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டம் 34ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

error: Content is protected !!