India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வளர்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மோதிஷ் (488/500) மற்றும் அம்மனூரில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் முதல் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு நேற்று அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சுகந்தி வினோதினி மிதிவண்டிகளை வழங்கினர்.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வளர்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மோதிஷ் (488/500) மற்றும் அம்மனூரில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் முதல் இடத்தை பிடித்த மாணவ மாணவிக்கு இன்று அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சுகந்தி வினோதினி மிதிவண்டிகளை வழங்கினர்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் ( இரவு 7 மணி வரை ) ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 3 குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது .அது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தலைமையில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சப் இன்ஸ்பெக்டர் மனோகரன், மோகன்ராஜ் ஆகியோர் போலீசாருக்கு இன்று பயிற்சி அளித்தனர். மாவட்ட முழுவதும் உள்ள எல்லா போலீசாருக்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வாலாஜா, அரப்பாக்கம் அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டல் கல்லூரி கனவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி , திட்ட இயக்குனர் லோகநாயகி, முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.
ராணிப்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த அபிநயா என்ற மாணவியை நேரில் அழைத்து பாராட்டினார். இதில் மாவட்ட அவை தலைவர் ஏ.கே.சுந்தர மூர்த்தி மற்றும் கழகத்தினர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை, ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த ஜூம்சங்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இன்று சுமார் பகல் 12 மணிக்கு மேல் கரும்புத் தோட்டத்திற்கு மேல் மின்சார ஒயரிலிருந்து தீப்பொறி பட்டு கரும்பு தோட்டம் முழுவதும் எறிந்தன. சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை பேருந்து நிலையம் அருகே, அன்னையர் தினத்தை முன்னிட்டு, கோடை வெயிலை தணிக்க மக்களுக்கு உதவும் வகையில் நேற்று(மே 12) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விஜய் மக்கள் இயக்க ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் நெமிலி விஏஓ சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நெமிலி தாலுகா விஏஓ வட்ட தலைவராக பூபாலன், செயலாளராக ரஞ்சித்குமார், பொருளாளராக நாகராஜ், துணைத்தலைவராக குமார் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தில் விஏஓ கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் உயர் தொழில், நுட்ப கல்வி, மாணவர்களை வெளிநாடுகளில் அதிக சம்பளம் என ஏமாற்றி சுற்றுலா விசாவில் அழைத்து சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனவே மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்பும் இளைஞர்கள் மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விவரங்களைச் முழுமையாகவும் தெரிந்து கொண்டு செல்ல மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.