India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட உழவர் சந்தை மார்க்கெட்டில் காய்கறி நிலவரம்: உருளைக்கிழங்கு கிலோ ரூ.44 முதல் 40 வரையிலும், தக்காளி ரூ. 24 முதல் ரூ.28 வரையிலும்,கத்திரிக்காய் ரூ. 40 முதல் ரூ.36 வரையிலும், சிறிய வெங்காயம் ரூ.70 ரூபாய் முதல் ரூ.60 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.58 முதல் ரூ.48 வரையிலும்,இஞ்சி ரூ. 70 முதல் ரூ.160 ரூபாய் வரையிலும், பூண்டு ரூ.280 முதல் 300 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது
சோளிங்கர் தாலுகா பெருங்காஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். பாலிடெக்னிக் கல்லூரியில் 2 ம்ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் வீட்டில் இருந்து காணாமல் போனவர்.நேற்றிரவு அங்குள்ள கிணற்றில் சடலமாக மிதந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல கோணத்தில் சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூ. 1 லட்சம், பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு செப். 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா நேற்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை அரசு ஐடிஐயில் தற்போது 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்த உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. கல்வி தகுதி டிகிரி. 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். சம்பளம் ரூபாய் 12000. தகுதியானவர்கள் ராணிப்பேட்டை அரசு ஐடிஐ முதல்வர் என்ற முகவரிக்கு செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
வாலாஜா அருகே திருப்பாற்கடல் கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் குமாரி (அரசு பள்ளி சமையலர்). இவர் இன்று வீட்டில் இருந்தபோது விஷ பாம்பு கடித்துள்ளது. காவேரிப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் சென்று பின்னர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மக்களுடன் முதல்வர் முகாம் வரும் 22ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் அக்ராவரம் படவேட்டம்மன் கோயில் எதிரிலும், திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் மாம்பாக்கம் அரம் திருமண மண்டபத்திலும், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் குருராஜபேட்டை அரசு உ.பள்ளியிலும், நெமிலி ஊராட்சி ஒன்றியம் பள்ளூர் அரசு நடுநிலைப் பள்ளியிலும் நடக்கிறது என ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 17 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அரக்கோணம் தாலுகா பள்ளூர் வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி நெமிலி வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணியாற்றி வந்த ஷர்மிளா பள்ளூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று மாவட்டத்திலுள்ள 6 தாலுகாவில் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலையை விரிவுபடுத்த பல சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறப்பு தொழில் கடன் முகாம் ஆகஸ்ட் 19ஆம் முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் குறைதீர்வு கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் தங்களது குறைகள் குறித்து கடிதம் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். குறைதீர்வு கூட்டத்தில் தங்களது குறைகள் குறித்து பேசப்படும் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட உழவர் சந்தை மார்க்கெட்டில் காய்கறி நிலவரம் உருளைக்கிழங்கு 1 கிலோ ரூ.42 தக்காளி ரூ.24 முதல் ரூ.28 வரையிலும், கத்திரிக்காய் ரூ.40 முதல் ரூ.36 வரையிலும், சிறிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.48 வரையிலும், இஞ்சி ரூ.70 முதல் ரூ.160 ரூபாய் வரையும், கேரட் ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், பூண்டு ரூ.260 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.