India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மார்ச் 2025 முதல் ஜூன் 2025 வரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் தொடங்கப்பட்டு. 16, 249 விவசாயிகளிடம் இருந்து ரூ.251.986 கோடி மதிப்பிலான, 1,03,025டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு (9445030523). எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பாரத மிகுமின் பெல் நிறுவனத்தின் நிறைவு வாயிலில் எதிராக கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் முத்துக்கடை பேருந்து நிலையம், ஆற்காடு, கலவை, சோளிங்கர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அந்த வகையில் மறியலில் ஈடுபட்ட 800 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க
ழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டபட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT சர்வே குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வர். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (04172271000) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க. <<17016550>>தொடர்ச்சி<<>>
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல்லுக்கான தொகையை வங்கிக் கணக்கிற்கு வராத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4ஆம் தளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை, அலுவலக வேலை நாட்களில் அணுகலாம் என்று கலெக்டர் ஜெ. யூ. சந்திரகலா அறிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் நெல்லுக்கான தொகை விரைவில் கிடைக்க வழிவகுக்க செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், வரும் ஜூலை 15 அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்று தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இம்முகாம்கள் அக்டோபர் மாதம் வரை நடைபெறும். முகாம் நடைபெறும் நாட்களில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் முகாமில் மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை 1856 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று சென்னை ராயபுரத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தின் வாலாஜா சாலை வரை இயக்கப்பட்டது. இது சுமார் 60 மைல் தூரம் கொண்டது. இது அன்றைய மெட்ராஸ் கவர்னர் ஹாரிஸ் பிரபுவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த முதல் ரயிலில் ஆளுநர் ஹாரிஸ் மற்றும் சுமார் 300 ஐரோப்பியர்கள் பயணித்தனர். வரலாற்றில் ராணிப்பேட்டைக்கு ஒரு சிறப்பு இடத்தைக் கொடுக்கிறது.ஷேர்
ராணிப்பேட்டை மாவட்ட கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://ranipet.nic.in என்ற இணையதள முகவரியில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திற்கான காலி பணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 06.08.2025. ஷேர் பண்ணுங்க.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை.09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு (9884098100) அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.