India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி அவர்களின் உத்தரவின் படி தனி படை அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் பிரபு உள்ளிட்ட இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாலாஜா தாலுகா கல்மேல் குப்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் வன்னிவேடு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து வாலாஜா குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு சென்று சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெற்றோரிடம் 18-வயது பூர்த்தியான பிறகே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
தமிழக மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்கும் வகையில், நான் முதல்வன் என்கின்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4200 மாணவா்கள் பயன்பெற்றுள்ளனர் என மாவட்ட நிா்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயா்கல்வி, வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
ராணிப்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கஞ்சா கடத்தியதாக கர்நாடக மாநிலம் மாண்டியவை சேர்ந்த மதன் மற்றும் குமாரசாமியை கைது செய்தனர். இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க எஸ்பி கிரண்ஸ்ருதி ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதிக்கு பரிந்துரை செய்திருந்தார். ஆட்சியர் உத்தரவின் பேரில் மதன் மற்றும் குமாரசாமி ஆகியோர் குண்டர் சட்டதில் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட தலைமை ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி கலந்து கொண்டு போலீசாரின் உடல் தகுதி திறனை சோதித்தார். அப்போது போலீசார் எப்படி தங்களது உடல் திறனை வைத்துள்ளார் என்று அவர்கள் செய்யும் உடற்பயிற்சியை வைத்து சோதனை செய்தார். இதில் ராணிப்பேட்டை மாவட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் அடுத்த அம்மனூர் ஊராட்சியில் ஆதி திராவிடர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் எத்தனை பேர் வீடு கட்டியுள்ளனர். இடம் ஒதுக்கியும் இன்னும் எத்தனை பேர் வீடு கட்டாமல் உள்ளனர் என்று ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ராஜலக்ஷ்மி இன்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது நில அளவையர் மற்றும் வருவாய்த் துறையினர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பழனி, அம்சா அவர்களின் மகள் சுபஸ்ரீ. இவர் நடந்த முடிந்த 10ஆம் வகுப்பு தேர்வில் 500/491 மதிப்பெண் பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாவது இடத்திலும், வி.கே மாங்காடு உயர்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். இதனை அடுத்து திமுக மாவட்ட கழக பொருளாளர் A.V. சாரதி அவர்களிடம் வாழ்த்து பெற்று அவரின் உயர் கல்விக்கான உதவித்தொகையை வழங்கினார்.
ராணிப்பேட்டை, நெமிலி பகுதியில் அமைந்துள்ளது காவேரிப்பாக்கம் ஏரி. இது, தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி ஆகும். 3968 ஏக்கர் பரப்பளவும், 1,474 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட இந்த ஏரி பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனால் வெட்டப்பட்டது. இந்த ஏரி பாலாற்றில் இருந்து அமைக்கபட்ட வாய்கால் வழியாக நீரைப் பெறுகிறது. இந்த ஏரியில் இருந்து 14 கிராமங்களின் 6278 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 997 போ் மருத்துவ சேவை பெற்று பயனடைந்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 997 பேருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
திருத்தணியில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த அடையாளம் தெரியாத கார் தணிகைபோளூர் வரும் போது அவ்வழியாக வந்த பைக் மீது நேற்று இரவு மோதியது. இவ்விபத்தில் தணிகைபோளூரை சேர்ந்த கிஷோர் குமார், ரஞ்சித் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.