India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (17.12.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.20ம் தேதி காலை 10 மணி முதல் ராணிப்பேட்டை HEAD POST OFFICE அருகில் உள்ள பழைய BSNL அலுவலகத்தில் நடைபெற உள்ளதாகவும், பட்டதாரிகள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெற்று பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மக்களிடம் இருந்து 322 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் அவர் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தலைமையில் ஏற்றுமதிப் பொருள்கள் தொடர்பாக ஊக்குவிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட தொழில் மையம் மேலாளர் ஆனந்தன். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராம்ஜிகுமார், குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க உறுப்பினர்கள், ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 16 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தைவானின் ஹாங்பூ நிறுவனம் சார்பில் 25 ஆயிரம் பேருக்கு வேலையளிக்கும் ரூ.1500 கோடி முதலீட்டிலான தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தைவானைச் சேர்ந்த ஹாங் பூ நிறுவனம், தோல் அல்லாத காலணி மற்றும் விளையாட்டுக்கான காலணிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு இன்று (டிச -16) வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், “குழந்தைக்கு கல்வி தேவை, வளமான வாழ்க்கைக்கு திருமணம் அல்ல. பெண்கள் குழந்தைப் பருவத்திற்கும், கல்விக்கும், தங்கள் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்திற்கும் தகுதியானவர்கள்.” என ராணிப்பேட்டை காவல் துறை சார்பாக செய்தி வெளியிடப்பட்டது.

காய்கறி கிலோவில் தக்காளி ரூ 20-30,வெண்டைக்காய் ரூ 40-60,வெங்காயம் ரூ 50-80, சின்ன வெங்காயம் ரூ 70, கத்திரிக்காய் ரூ60, 80,100 புடலை ரூ 30-40,பூசணி ரூ 20, உருளைக்கிழங்கு ரூ 40-60, காலிஃப்ளவர் ரூ 30-40,முள்ளங்கி ரூ 40,கேரட் ரூ 60-80,தேங்காய் ரூ 20-30,பூண்டு 250,380,400,இஞ்சி ரூ 60,100,180,பீட்ரூட் ரூ 70-90, கருணைக்கிழங்கு ரூ 80,சேம கிழங்கு ரூ 60-80,எலுமிச்சை ஒன்று ரூ 10 என விற்பனை செய்யப்படுகிறது.

பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் காலணி தொழிற்சாலை அமைய உள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த ஹோங்ஃபு (Hongfu) நிறுவனம் 1500 கோடி முதலீட்டில் காலணி ஆலையை அமைக்கிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது.தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.காலணி ஆலை மூலம் 25,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று (16ம்தேதி) நள்ளிரவில் மழை பெய்யத் தொடங்கி அதிகாலையில் தீவிரம் அடையத் தொடங்கும் என்றும், அதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் ராணிப்பேட்டையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.