India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் இளைஞர் நீதி சட்டம் 2015 குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு குழந்தைகள் நல காவலர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டது.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.நிகழ்வில் பல்வேறு காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சோளிங்கர் தாலுகா புலிவலம் அடுத்த கட்டாரி குப்பம் கிராமத்தில் குவாரிக்கு செல்லும் வழியில் உள்ள குட்டை நீரில் இன்று மாலை பெண் ஒருவரது சடலம் மிதந்தது. இது குறித்து சோளிங்கர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
அரக்கோணம் யார்டில் 28 மற்றும் 29 தேதிகளில் மதியம் 2.40 முதல் மாலை 6:40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.இதனால் சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.12.40,1.25,2.25, 3.50,4.45 நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் திருவள்ளூர் வரை செல்லும். மறுமார்க்கத்தில் திருவள்ளூரில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் செப்.1ஆம் தேதி ஆற்காடு வேப்பூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில், அமைச்சர் காந்தி, எம்.பி. ஜெகத்ரட்சகன், இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரப்பன், மாவட்ட அவை தலைவர் சுந்தரமூர்த்தி, சுற்றுச்சூழல் மாநில துணை செயலாளர் வினோத் காந்தி, பலர் கலந்து கொள்கின்றனர். திமுக முப்பெரும் விழா குறித்து ஆலோசனை நடக்கிறது என அமைச்சர் காந்தி அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.
நெமிலி பேருந்து நிலையத்தில் நேற்று மாலை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உருவபொம்மையை நெமிலி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயன் தலைமையில் அதிமுகவினர் எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தரக் குறைவாக பேசிய அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
சோளிங்கர் பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை அதிமுகவினர் இன்று காலால் எட்டி உதைத்தும், அவரது உருவ பொம்மையை எரிக்கவும் முயன்றனர். அப்போது போலீசார் உருவ பொம்மை எரிக்க விடாமல் தடுத்தனர். அவை தொடர்ந்து அதிமுகவினர் மேற்கு ஒன்றிய செயலாளர் பெல் கார்த்திகேயன், நகர செயலாளர் வாசு, ஒன்றிய செயலாளர் விஜயன் மற்றும் நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் சோளிங்கர் ஒன்றியம் பெருங்காஞ்சி பகுதியில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக, ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக மாவட்டச் செயலாளர் சீம.ரமேஷ் கர்ணா தலைமையில் நாளை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை செப்.7ஆம் தேதி முதல் தொடங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் 1305 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. இந்நிலையில் ரோப்கார் பராமரிப்பு பணிகளுக்காக ஆக.22ஆம் தேதி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் இச்சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் ஆக.29-ஆம் தேதி (வியாழக்கிழமை) வாலாஜா வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கேலோ இந்தியா கையுந்துப்பந்து பயிற்சி மையத்தில் கையுந்துப்பந்து போட்டி மற்றும் ஓட்டப்பந்தய போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டி நடக்கும் அன்று காலை 6 மணிக்குள் நேரில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி ஆணையர் நகராட்சி ஆணையர் வெங்கட் லட்சுமணன் தலைமையில் அதிகாரிகள் ஆற்காடு பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2.5 டன் கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைக்கு அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
Sorry, no posts matched your criteria.