Ranipet

News August 28, 2024

ராணிப்பேட்டையில் ஆறு இடங்களில் மட்டுமே அனுமதி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை தண்டலம் ஏரி, புளியந்தாங்கல் ஏரி , ஆற்காட்டில் ஆற்காடு ஏரி, வேப்பூர் ஏரி, அரக்கோணத்தில் மங்கம்மாபேட்டை ஏரி, மாவேரி ஏரி ஆகிய ஆறு இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்க வேண்டும். போலீஸாருக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் விழா குழுவினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறி நிலவரம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஓவர் சந்தை மார்க்கெட்டில் காய்கறி நிலவரம் உருளைக்கிழங்கு 1கிலோ ரூ.46 வரையிலும், தக்காளி ரூ.25 வரையிலும், கத்திரிக்காய் ரூ.36 முதல் ரூ.40 வரையிலும், சிறிய வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.55 வரையிலும், இஞ்சி ரூ. 180 வரையிலும், கேரட் ரூ. 70 வரையிலும், பூண்டு ரூ.260 முதல் ரூ.280 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

News August 28, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். இவைகள் மீது வேதியியல் கலந்த வர்ணம் பூசக்கூடாது. நீரில் கரையும் தன்மையுடைய விநாயகர் சிலைகளை மட்டும் உபயோகிக்க வேண்டும். 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் அமைக்க கூடாது என்றும், மாவட்ட நிர்வாகம் அனுமதித்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

கோவை ரயில்கள் செப்.1 ல் காட்பாடி வரை மட்டுமே

image

அரக்கோணத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் கோவையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி (12680) எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 1ம் தேதி காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேபோன்று சென்னையில் இருந்து கோவைக்கு இயக்கப்பட வேண்டிய (12679) ரயில் காட்பாடியில் இருந்து மாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது

News August 28, 2024

ராணிப்பேட்டையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோர்ட்டுடன் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?

News August 28, 2024

திருப்பதி மெமு ரயில் இரு நாட்களுக்கு முழுவதும் ரத்து

image

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு காலை 9 .50 மணிக்கு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அரக்கோணத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 28 , 29 ஆகிய இரு தேதிகளிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது . அதே போன்று திருப்பதியில் இருந்து மதியம் 1:25 மணிக்கு சென்னைக்கு இயக்கப்படும் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

News August 28, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் இளைஞர் நீதி சட்டம் 2015 குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு குழந்தைகள் நல காவலர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டது.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.நிகழ்வில் பல்வேறு காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 27, 2024

ராணிப்பேட்டை அருகே மர்ம மரணம்

image

சோளிங்கர் தாலுகா புலிவலம் அடுத்த கட்டாரி குப்பம் கிராமத்தில் குவாரிக்கு செல்லும் வழியில் உள்ள குட்டை நீரில் இன்று மாலை பெண் ஒருவரது சடலம் மிதந்தது. இது குறித்து சோளிங்கர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 27, 2024

சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு ரயில்கள் ரத்து

image

அரக்கோணம் யார்டில் 28 மற்றும் 29 தேதிகளில் மதியம் 2.40 முதல் மாலை 6:40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.இதனால் சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.12.40,1.25,2.25, 3.50,4.45 நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் திருவள்ளூர் வரை செல்லும். மறுமார்க்கத்தில் திருவள்ளூரில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

News August 27, 2024

செப்.1ல் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

image

திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் செப்.1ஆம் தேதி ஆற்காடு வேப்பூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில், அமைச்சர் காந்தி, எம்.பி. ஜெகத்ரட்சகன், இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரப்பன், மாவட்ட அவை தலைவர் சுந்தரமூர்த்தி, சுற்றுச்சூழல் மாநில துணை செயலாளர் வினோத் காந்தி, பலர் கலந்து கொள்கின்றனர். திமுக முப்பெரும் விழா குறித்து ஆலோசனை நடக்கிறது என அமைச்சர் காந்தி அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!