Ranipet

News August 31, 2024

காவல் அதிகாரிகளுக்கு தியான பயிற்சி வகுப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தியான பயிற்சி அமைப்பு மூலம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தியான பயிற்சி மற்றும் ஓய்வு நிலை பயிற்சி அளிக்கப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன்,துணை காவல் கண்காணிப்பாளர்கள் திருமால்,ரமேஷ் ராஜ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

News August 31, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு 

image

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை மாதத்தின் முதல் வாரம் மற்றும் 3-ஆம் வாரம் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமைகளில் அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் உள்ள என்எல்பி மண்டபத்திலும், 3-ஆம் வாரம் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்திலும் முகாம் நடைபெறும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

ராணிப்பேட்டை: ராமதாசுக்கு அமைச்சர் பதில்

image

பொங்கல் பண்டிகைக்கு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கும் வேட்டி சேலை முழுவதும் விசைத்தறி நெசவாளிடமிருந்து வாங்கி இருப்பதாகவும், இதனால் கைத்தறி நெசவாளர்கள் பெருமளவில் வேலை இழப்பார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் காந்தி 46.43 லட்சம் சேலைகளும் 20.86 லட்சம் வேட்டிகளும் கைத்தறி நெசவாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

ராணிப்பேட்டை அருகே வாலிபர் மர்ம மரணம்

image

நெமிலி தாலுகா பன்னியூர் கிராம எல்லையில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் விழுந்து கிடந்தார். அந்த வழியாக ரோந்து பணியில் சென்ற பாணாவரம் போலீசார் வாலிபரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார் .போலீஸ் விசாரணையில் கீழ் வீராணம் மோட்டூரை சேர்ந்த வேலு என்பது தெரிந்தது. இவர் எப்படி இறந்தார் என பாணாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 31, 2024

ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

image

ராணிப்பேட்டையில் அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டி செப் 3 காலை 10 மணியளவில் பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணியளவில் கல்லூரி மாணவர்களுக்கும், தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி செப் 4 காலை 10 மணியளவில் பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணியளவில் கல்லூரி மாணவர்களுக்கும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

ராணிப்பேட்டை கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

image

நெமிலி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை (ம) வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சந்தானம், சர்மாமூர்த்தி, சிவா, ராஜசேகர், பரசுராமன், அஜித் உள்ளிட்ட 7 நபர்களுக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.5,000 அபராதம் விதித்து தாழ்த்தப்பட்டோர் (ம) பழங்குடியினர் நேற்று தீர்ப்பளித்தது. இதில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி கிரண்ஸ்ருதி பாராட்டு தெரிவித்தார்.

News August 31, 2024

ரயில் நிலையத்தில் ரத்தம் கக்கி வாலிபர் சாவு

image

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் நேற்று வாலிபர் ஒருவர் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து டவுன் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில், அரக்கோணம் மதுரைப்பிள்ளை தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது.

News August 31, 2024

மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகள் கைது

image

காவேரிப்பாக்கம் அருகே உள்ள கரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி, மாமியார் கொள்ளாபுரி. இவர்களுக்கிடையே நேற்று வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆவேசமடைந்த ஜெகதீஸ்வரி மாமியாரை காய் அரியும் கத்தியால் கழுத்து மற்றும் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த கொள்ளாபுரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஸ்வரியை கைது செய்தனர்.

News August 30, 2024

IIMUN 2024 தொடக்க விழா முன்னாள் முதல்வர் பங்கேற்பு

image

ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் சர்வதேச இயக்கம் (IIMUN) 2024 – தொடக்க விழா ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள ஜிகே உலக பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

News August 30, 2024

போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-2 & 2A போட்டித்தேர்விற்கான மாதிரி தேர்வு நாளை 31.08.2024 காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!