Ranipet

News September 2, 2024

ராணிப்பேட்டை அருகே நாளை மின்தடை 

image

சோளிங்கர் கோட்டம் மேல் வெங்கடாபுரம் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மேல்வெங்கடாபுரம், கொடைக்கல், ரெண்டாடி, நீலகண்டராயன்பேட்டை, ஜம்பு குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை (செப்டம்பர் –  3) மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

News September 2, 2024

ராணிப்பேட்டை: முன்பதிவு செய்ய இன்று கடைசி நாள்

image

ராணிப்பேட்டையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுளள்து . விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் .இன்று மாலை 5 மணி வரை பதிவு செய்ய முடியும்.

News September 2, 2024

இன்று குரூப் 2 மாதிரி தேர்வு

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-Il & llA போட்டித் தேர்விற்கான மாநில அளவிலான முழுமாதிரி தேர்வு – 2 இன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது

News September 1, 2024

அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு 

image

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு பணி மற்றும் கேசாவரம் குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் இன்றும்,நாளையும்  மேற்கொள்ளப்பட உள்ளதால் அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கு குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படும் என்றும்,3ம் தேதி முதல் குடிநீர் வழங்கும் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்படும் என்று அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

News September 1, 2024

ராணிப்பேட்டையில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

image

ராணிப்பேட்டை மற்றும் நெமிலி ஆகிய 2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கொலை குற்றசம்பவங்களில் ஈடுபட்ட ராணிப்பேட்டை அரவிந்த் (34) மற்றும் நெமிலி சுந்தரமூர்த்தி (23) ஆகிய இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News September 1, 2024

3 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள்

image

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடை துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள கால்நடை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக 3 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை அமைச்சர் ஆர்.காந்தி ஊர்தி ஓட்டுனர்களிடம் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் கோபிகிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News September 1, 2024

கோவை மைசூர் ரயில்கள் இன்று காட்பாடிடன் நிறுத்தம்

image

அரக்கோணத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. மறு மார்க்கத்தில் காட்பாடியில் இருந்து மாலை 4:25 மணிக்கு புறப்படுகிறது. அதேபோன்று மைசூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் காட்பாடி நிறுத்தப்படுகிறது .மறு மார்க்கத்தில் காட்பாடியில் இருந்து மாலை 5:25 மணிக்கு பெங்களூருக்கு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News September 1, 2024

வாலாஜா சுங்கச்சாவடியில் இன்று முதல் உயர்வு

image

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது. சுங்கக்கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஷேர் பண்ணுங்க.

News August 31, 2024

ராணிப்பேட்டை மாற்றுத்திறனாளி மாணவன் தட்டச்சு தேர்வில் கலக்கல்

image

தமிழ்நாடு அளவிலான தட்டச்சு தேர்வு இன்று 31.8.24 நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சார்ந்த ஜிப்ரான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது மின்விபத்தில் அவருடைய வலது கையை முற்றிலும் இழந்துவிட்டார். இருந்தபோதிலும் அவர் மனம் தளராமல் தனது இடது கையால் மட்டும் இன்று நடைபெற்ற லோயர் கிரேட் டைப் ரைட்டிங்கில் வேகமாக தட்டச்சு செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

News August 31, 2024

காவல் அதிகாரிகளுக்கு தியான பயிற்சி வகுப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தியான பயிற்சி அமைப்பு மூலம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தியான பயிற்சி மற்றும் ஓய்வு நிலை பயிற்சி அளிக்கப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன்,துணை காவல் கண்காணிப்பாளர்கள் திருமால்,ரமேஷ் ராஜ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

error: Content is protected !!