Ranipet

News September 4, 2024

ராணிப்பேட்டையில் அறிவுரை வழங்கிய அமைச்சர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவேரிப்பாக்கம் பகுதியில் திமுக ஒன்றிய கழகத்தின் சார்பாக நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டுமென கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

News September 4, 2024

ராணிப்பேட்டை ஆசிரியர்கள் நான்கு பேருக்கு விருது

image

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படும் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்தாண்டு ராணிப்பேட்டையிலிருந்து நான்கு பேர் தேர்வாகியுள்ளனர். அரசினர் ஆதி திராவிட பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரஜினி பிரியா, அரக்கோணம் அரசினர் உயர்நிலை பள்ளி ஆசிரியர் கௌரி, விஆர்வி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் சதீஷ் பானர்ஜி, ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஜானகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News September 4, 2024

ராணிப்பேட்டையில் தடகளப் போட்டிகள் தொடக்கம்

image

ராணிப்பேட்டை மாவட்டம், மண்டல அளவில் தடகளப் போட்டிகள் வாலாஜா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இன்று நடைபெறுகிறது. விளையாட்டு போட்டியில் 11 மாவட்ட மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் வெற்றி பெற்றவர்கள் வரும் 20ம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று ராணிப்பேட்டை மாவட்டம் உடற்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

பேருந்து மீது கார் மோதி 4 பேர் காயம்

image

அரக்கோணம் – காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலை பள்ளூரில் திருப்பதியில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிரே வந்த தனியார் கம்பெனி பேருந்து மீது இன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த சுமதி, சண்முகசுந்தரம், பாக்யராஜ், கிஷோர் குமார் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 3, 2024

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தகவல்

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-2 & 2A போட்டித்தேர்விற்கான தமிழ்த்தேர்வு (100-கேள்விகள்) 04.09.2024 புதன்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. தேர்வாளர்கள் போட்டித்தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

News September 3, 2024

மின்சார ரயில்கள் இன்று ரத்து

image

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 7:55, 10:55 நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் இரவு 10:20-க்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. இரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

News September 3, 2024

ரயிலில் 8 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது

image

ராணிப்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று தலங்கை ரயில் நிலையம் அருகில் வரும்போது திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த ரயிலில் 8 கிலோ கஞ்சா கடத்திய ஒடிஷாவை சேர்ந்த திலீப் ராவத்(28) என்பவரை கைது செய்தனர். கஞ்சாவை அவர் திருப்பூருக்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. யாருக்கு கடத்தி செல்கிறார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

News September 3, 2024

ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

image

அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் செப். 15 முதல் 6 நாள்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். இந்தநிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளன்று அவரின் சிலைக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். துணைப் பொதுச்செயலா் கே.பி.முனுசாமி ராணிப்பேட்டையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

News September 3, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் ஆலோசனை

image

தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று பள்ளி, கல்லூரிகளில் பாலியல் பிரச்சனைகள் தடுப்பது குறித்து அனைத்து பள்ளி கல்வி நிறுவன முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா நேரலையில் கலந்து கொண்டார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 2, 2024

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நேரலையில் கலந்து கொண்டார்

image

தமிழ்நாடு அரசின் அரசு முதன்மைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று பள்ளி கல்லூரிகளில் பாலியல் பிரச்சனைகள் தடுப்பது குறித்து அனைத்து பள்ளி கல்வி நிறுவன முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரலையில் கலந்து கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!