India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரமலான் திருநாளை முன்னிட்டு சென்னை சென்ட்ரலிருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக போத்தனூர் வரை செல்லும் சிறப்பு ரயில் (06027) மார்ச் 30 இரவு 11.30 க்கு சென்னையில் இருந்து புறப்படும். மறு மார்க்கத்தில் போத்தனூரிலிருந்து சென்னைக்கு (06028) மார்ச்.31 காலை 8.20 க்கு புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வெப்ப அலை பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை கமாண்டர் கபில், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ரூபி பாய் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா இன்று (19.03.2025) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் ஆற்காடு நகர பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகளையும், அங்கு பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், வணிக வளாகங்களுடன் கூடிய ஆற்காடு தினசரி சந்தை கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்திய அஞ்சல் துறையின் ஒரு பிரிவான இந்திய அஞ்சல் கட்டண வங்கியில், காலியாக உள்ள 51 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நாளைக்குள் (மார்.21) இந்த <
ராணிப்பேட்டை தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும், குறிப்பாக தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள், காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர்களின் பெரிய இராணுவத்தளமாகவும் இருந்துள்ளது. ராஜா தேசிங்கின் மனைவி ராணிபாயின் நினைவாகத்தான் ராணிப்பேட்டை என்ற பெயர் வந்ததாக அறியப்படுகிறது. இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்.
காவேரிப்பாக்கம் அருகே உள்ள அவளூரை சேர்ந்தவர் விவசாயி முனுசாமி (65).இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர்.முதல் மனைவியின் மகனான விநாயகத்துடன் (45) சொத்து தகராறு நீடித்து வந்தது. நேற்று ஏற்பட்ட வாக்குவாதத்தில், விநாயகம் தந்தையை கட்டையால் தாக்கி உள்ளார்.பலத்த காயமடைந்த முனுசாமி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.அவளூர் போலீசார் வழக்குப்பதிந்து விநாயகத்தை கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்றுஇரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை வெளியிட்டுள்ளது. தக்கோலம், பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் உள்ளனர். புகார்கள் மற்றும் தகவல்களுக்கு புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 98840 98100-ஐ அழைக்கலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த விண்ணப்பத்தை<
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை முகநூல் பக்கத்தில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு காவல்துறையால் செங்கல்பட்டில் தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி வளாகத்தில் (மார்ச்17-22) நடத்தப்படும் 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கவரும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவல்துறை துப்பாக்கி சுடும் வீரர்களை வரவேற்கிறது என பதிவிட்டுள்ளது.
பனப்பாக்கம் அடுத்த தென்மாம்பாக்கத்தை சேர்ந்தவர் குமார் (44 ) இவர் சலூன் கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி நேற்று தேர்வு எழுத சென்றபோது பின் தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அம்மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.