Ranipet

News June 8, 2024

அரசு ஐடிஐ விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

image

ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஜூன் 13ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை , அரக்கோணம் ஐடிஐ அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

ராணிப்பேட்டையில் 508 மில்லி மீட்டர் மழை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. குறிப்பாக வாலாஜாவில் 132.6 மில்லி மீட்டர் மழையும், அரக்கோணத்தில் 74.5 மில்லி. மீ மழையும் பதிவானது .
அது மட்டும் இன்றி பல்வேறு ஊர்களிலும் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 508.1 மில்லி மீட்டர் மழை பதிவானது. கடந்த இரு நாட்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

News June 8, 2024

பிற்படுத்தப்பட்டோர் அலுவலகம் சார்பில் கடனுதவி

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன் , சுய உதவிக்குழு கடன், சிறு தொழில் கடன், கைவினை கலைஞர் கடன், கல்வி கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடன் தேவைப்படுவோர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அருகில் உள்ள கூட்டுறவு வங்கி அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் தரலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்

News June 8, 2024

நின்றிருந்த டிராக்டர் மீது ஆட்டோ மோதி விபத்து

image

அரக்கோணம் அருகே டிராக்டர் ஒன்று நேற்றிரவு பழுதாகி நின்று கொண்டிருந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த ஷேர் ஆட்டோ இருட்டில் தடுமாறி டிராக்டர் மீது மோதியது . இதில் ஆட்டோ டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் ஆட்டோ டிரைவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 8, 2024

சோளிங்கர் கோவிலில் ஆண்டாள் புறப்பாடு உற்சவம்

image

ராணிப்பேட்டை, சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சாமி திருக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வாராந்திர ஆண்டாள் புறப்பாடு உற்சவம் இன்று நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

News June 7, 2024

ராணிப்பேட்டையில் 10 செ.மீ மழைப்பதிவு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜூன்.06) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரக்கோணம் பகுதியில் 11 செ.மீட்டரும், கலவாய் பகுதியில் 5 செ.மீட்டரும், ஆற்காடு பகுதியில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News June 7, 2024

சீரான மின்விநியோகம் கேட்டு சாலை மறியல்

image

கலவை, வாழைப்பந்தல் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் தெரு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக சீரான மின்விநியோகம் இல்லை. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை நேரிலும் மனுவாக கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த வாழைப்பந்தல் – ஆரணி சாலையில் நெசவாளர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

News June 7, 2024

ராணிப்பேட்டை: மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (07.06.24) மதியம் 1 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டையில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

ராணிப்பேட்டையில் 293 மி.மீட்டர் மழை

image

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட அரக்கோணம், பனப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று(ஜூன் 6) மாலை முதல் இன்று காலை 6 மணி வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 110.5 மி.மீட்டர் மழை பதிவானது. மொத்தமாக மாவட்டம் முழுவதும் 293 மில்லி மீட்டர் மழை பெய்து, இரவில் குளிர்ந்த காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

ஆற்காடு அருகே எஸ்பி திடீர் ஆய்வு!

image

ஆற்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி நேற்று(ஜூன் 6) திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து ஆற்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதியில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். தலைமறைவு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். டவுன் இன்ஸ்பெக்டர் சசிகுமார் உடன் இருந்தார்.

error: Content is protected !!