Ranipet

News September 6, 2024

ராணிப்பேட்டையில் தொழிற் பழகுநர் மேளா

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் மேளா மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளை கொண்டு செப் 23ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை நடத்தப்படுகின்றது. இந்த பயிற்சியில் சேர்ந்து என்ஏசி சான்றிதழ் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

அரக்கோணம் அருகே பழிக்கு பழியாக இளைஞர் கொலை

image

அரக்கோணம் அடுத்த கிழவனத்தில் பழிக்கு பழியாக இளைஞரை தந்தை, மகன் கொலை செய்தனர். ஓராண்டுக்கு முன்பு பாஸ்கர் என்பவர் சந்திரன் என்பவரை கொலை செய்துள்ளார். ஜாமினில் வந்த சந்திரன் பாஸ்கரின் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த சுப்பிரமணி, மகன் எத்திராஜ் சேர்ந்து சந்திரனை வெட்டியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சந்திரன் உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 6, 2024

ரயில் முன் பாய்ந்து சிறுமி தற்கொலை

image

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் 16 வயது சிறுமி நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். அம்மூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், சிறுமிக்கு திருமணத்தில் விருப்பமில்லை. இதனால் மனம் உடைந்த சிறுமி, வாலாஜா ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். போலீசார் வ்ழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 6, 2024

வாலிபருக்கு சரமாரி வெட்டு

image

அரக்கோணம் தாலுகா கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரை கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக இன்று சிலர் கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 5, 2024

10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை: எஸ்பி பாராட்டு

image

ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட புதுபுங்கனூர் கிராமத்தை சேர்ந்த பொன்முடி (வ/33) என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் என ராணிப்பேட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் இன்று (05.09.2024) தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளை மாவட்ட எஸ்பி பாராட்டினார்.

News September 5, 2024

ராணிப்பேட்டையில் விண்ணப்பிக்கலாம்

image

அகில இந்திய தொழிற்தேர்வில் தனிதேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் ரூபாய் 200 செலுத்தி பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

ஒன்றரை வயது பெண் குழந்தை நீரில் மூழ்கி பலி

image

பாணாவரம் அடுத்த போளிப்பாக்கம் ரோட்டு தெருவை சேர்ந்த ரேவதி-கார்த்திக் தம்பதியரின் ஒன்றரை வயது பெண் குழந்தை இன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளது. அப்போது வீட்டில் வைத்திருந்த பக்கெட் தண்ணீரில் தவறி விழுந்து மூச்சு திணறி மயங்கியது. வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News September 5, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் ஆலோசனை

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் இன்று ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, செயற்பொறியாளர் ராஜவேல், உதவி இயக்குநர் ஊராட்சிகள் சுதா மற்றும் பலர் உள்ளனர்.

News September 5, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டையைச் சோ்ந்த கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் அரசின் உதவிகளை எளிய முறையில் பெற நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன் பெறலாம் என ஆட்சியா் சந்திரகலா தெரிவித்துள்ளாா். சுயதொழில், வேலைவாய்ப்பினை அளிக்கும் வகையில் தொழில் நிறுவனங்களிடம் பயிற்சி அளிக்க வேண்டும், வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினா்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

News September 5, 2024

ராணிப்பேட்டை: சிறப்பு ரயில் இயக்கம்

image

சென்னை சென்ட்ரலில் இருந்து செப்.6ஆம் தேதி மாலை 3.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியாக கோவைக்கு இரவு 11.45 மணிக்கு சென்று சேருகிறது. மறு மார்க்கத்தில் 8ஆம் தேதி கோவையில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு காலை 7.35 மணிக்கு சென்று சேருகிறது என்று தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

error: Content is protected !!