India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

HMBV வைரஸ் வீரிய மற்றது அதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாமெனவும் சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் பொதுமக்கள் முககவசம் அணிந்து கொள்ளுதல், தினந்தோறும் அடிக்கடி கை கழுவுதல், வெந்நீர் குடித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் சுகாதார அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜன.12ஆம் தேதி காலை 8 மணி அளவில் ராணிப்பேட்டை நவல்பூரில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் 2025 தை பொங்கல் திருநாளை முன்னிட்டு, சைவம் மற்றும் அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் அதிமுக நிர்வாகிகள், பிரதிநிதிகள், தொண்டர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

அதிக சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை போன்ற விளம்பரங்களை இளைஞர்கள் நம்ப வேண்டாம் என ராணிப்பேட்டை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இளைஞர்கள் நம்ப வேண்டாம். உதவிக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும் எனவும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.10 அன்று சவுத் வெஸ்ட்டன் ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. 8.05 A.M பெங்களூரில் இருந்து புறப்படும் (07319) இந்த சிறப்பு ரயில் 2.40 P.Mக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து (07320) புறப்படும் ரயில் 3.40 P.M புறப்பட்டு 10.50 P.M க்கு பெங்களூர் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் அரக்கோணம், சோளிங்கர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அதிக சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை போன்ற விளம்பரங்களை இளைஞர்கள் நம்ப வேண்டாம் என ராணிப்பேட்டை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இளைஞர்கள் நம்ப வேண்டாம். உதவிக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும் எனவும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

சோளிங்கர் டவுன் வாலாஜா ரோட்டில் ரமேஷ் (வயது 52) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் மது அருந்த அனுமதி வழங்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடையில் போலீசார் சோதனை நடத்தி மது விற்பனை செய்ததை உறுதி செய்தனர். அதைததொடர்ந்து ரமேஷை கைது செய்தனர். மேலும் தாசில்தார் செல்வி, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் தேவன் (வயது 35). ரெயில்வே ஊழியர். இவர் இதே மார்கத்தில் மேம்பாலம் அருகே நேற்று காலையில் அந்த வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தேவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (07.01.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தி குறிப்பில், வாகனம் ஓட்டுவதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கவனத்தை 100% எப்போதும் வாகனம் ஓட்டுவதில் வைத்திருங்கள். வாகனம் ஓட்டும்போது உங்கள் தொலைபேசி அல்லது வேறு எந்த மின்னனு சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.