Ranipet

News June 16, 2024

ஏரிக்கரையில் வேன் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

image

நெமிலி தாலுகா காட்டுப்பாக்கம் கிராமத்தின் அருகில் பசும்பிலி ஏரிக்கரையில் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 15 பேர் வேனில் சென்று கொண்டிருந்தனர். இன்று மதியம் ஏரிக்கரையில் செல்லும் போது நிலை தடுமாறி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த சங்கர் என்பவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து பாணாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 16, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவுரை

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறை, மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தின் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்து பேசினார். அப்போது, “குழந்தை திருமணங்கள் தடுப்பதில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. பொறுப்புணர்ந்து ஊழியர்கள் செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.

News June 16, 2024

ராணிப்பேட்டை: ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

பக்ரீத் பண்டிகையையொட்டி ராணிப்பேட்டை வாரசந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  இதில், ஆடுகளின் விற்பனை வழக்கத்தை காட்டிலும் அமோகமாக நடைபெற்றது சுமாா் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனை 2 மடங்காக அதிகரித்துள்ளதால், வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

News June 16, 2024

நெமலி: நிலுவைத் தொகை வசூல்

image

நெமிலி தாலுகா பனப்பாக்கம் உள் வட்டம் கர்ணாவூர் அடுத்த குப்பக்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்த கோபால், சிவராமன் ஆகிய இருவரிடம் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை செலுத்துமாறு வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் விஏஓ ஆகியோர் இன்று தெரிவித்தனர் . ஜமாபந்தி நடைபெறவிருக்கும் நிலையில் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தொகைகளை வசூலிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 15, 2024

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

image

ஆற்காடு அடுத்த வேப்பூரை சேர்ந்த முகமது இக்பாலை அவரது மகன் இம்ரான் கொலை செய்தார். இந்த வழக்கு ராணிப்பேட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி செல்வம் கொலை குற்றம் சாட்டப்பட்ட இம்ரானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபாராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். வழக்கை திறம்பட விசாரித்த அப்போதைய ஆய்வாளர் விநாயகமூர்த்தியை எஸ் பி கிரண்ஸ்ருதி பாராட்டினார்.

News June 15, 2024

ராணிப்பேட்டை: வாராந்திர கவாத்து பயிற்சி 

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் இன்று (ஜூன் 15) நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த பயிற்சி அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

News June 15, 2024

பிராணிகள் வதை தடுப்பு சங்கம் – ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் அமைப்பது குறித்த ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 14) நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். கால்நடை இணை இயக்குனர் கோபி கிருஷ்ணன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கால்நடைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்க பிராணிகள் வதை தடுப்பு சங்கம் அமைக்கப்பட உள்ளது.

News June 15, 2024

மாவட்ட திறன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திறன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (ஜூன் 14) நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். திறன் பயிற்சி உதவி இயக்குனர் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன் மற்றும் சிறு குறு தொழில் நிர்வாகத்தை சேர்ந்த சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News June 15, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு

image

ராணிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏற்கனவே பழுதடைந்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படாமல் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பு செய்வதற்காக அனைத்து அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி உடன் இருந்தார்.

News June 14, 2024

ராணிப்பேட்டை: நண்பரை அடித்த கொன்ற முன்னாள் ராணுவ வீரர்

image

ராணிப்பேட்டை, வாலாஜா, பில்லியப்பா நகரைச் சேர்ந்தவர் ரகோத்தமன் (54). பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (54), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், நேற்றிரவு ராஜேந்திரனின் வீட்டில் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் கட்டையால் தாக்கியதில் ரகோத்தமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

error: Content is protected !!