India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.
ஆற்காடு மேற்கு ஒன்றியம் தென்நந்தியாலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா அனைத்து கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேற்படி சிறுதானியங்கள், பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டிகளில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா அனைத்து கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேற்படி சிறுதானியங்கள், பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டிகளில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டையில் ‘நான் முதல்வன்’ உயர்வுக்கு படி நிகழ்ச்சி செப் 10, 13, 20, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 10ஆம் தேதி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி கல்லூரியில் நடைபெற உள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் ஒரே இடத்தில் கூடி, உயர் கல்வியில் இதுவரை சேராத மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்ப்பித்து வாழ்க்கையை தரத்தை உயர்த்தி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் ‘நான் முதல்வன்’ உயர்வுக்கு படி நிகழ்ச்சி செப் 10,13,20,24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 10ம் தேதி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி கல்லூரியில் நடைபெற உள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் ஒரே இடத்தில் கூடி, உயர் கல்வியில் இதுவரை சேராத மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்ப்பித்து வாழ்க்கையை தரத்தை உயர்த்தி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த மீனாட்சி (47). அவரது மகள் பவித்ரா (24), மகன் யுவனேஷ் (20) ஆகிய மூன்று பேர் வீட்டில் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தனர். மீனாட்சியின் கணவர் விஜயன் தலைமறைவாக உள்ளார். டவுன் போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள விஜயனை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாத வகையில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்திரகலா அறிவுறுத்தியுள்ளார். இனிவரும் காலங்களில் தொடர்ந்து ஒருங்கிணைந்த துறைகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.