Ranipet

News September 11, 2024

அரக்கோணத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

அரக்கோணத்தில் டிவிஎஸ் குரூப் ஆஃப் கம்பெனி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் இணைந்து வேலை வாய்ப்பு முகாமினை செப்டம்பர் 12ஆம் தேதி கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்த உள்ளனர். இந்த முகாமில் பி.இ, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

image

வாலாஜா சேர்ந்த ஜிப்ரான் என்பவர் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதில் மின்சாரம் தாக்கியதால் அவரது வலது கை முற்றிலும் செயல் இழந்தது. இந்த செய்தியை கடந்த வாரம் நமது வே2நியூஸ்-ல் பதிவிட்டு இருந்தோம். செய்தி அறிந்த மாவட்ட நிர்வாகம், மாணவனை நேரில் அழைத்து செயற்கை கை பொருத்துவதற்கான அளவீடு செய்யும் பணி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

News September 11, 2024

இ.பி.எஸ் உடன் ராணிபேட்டை மாவட்ட செயலாளர் சந்திப்பு

image

ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார், பசுமைவழிச் சாலையில் அதிமுக பொது செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதில் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 11, 2024

அரக்கோணத்தில் போலீசை தாக்கிய இளைஞர் கைது

image

பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் பொதுபெட்டியில் இன்று சில வாலிபர்கள் பாட்டு பாடியபடி வந்தனர் ரயில்வே கட்டுப்பாட்டு துறைக்கு பயணி ஒருவர் புகார் தெரிவித்தார், ரயில் அரக்கோணம் வந்தபோது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர்களை கீழே இறக்கினார் அப்போது அரக்கோணம் சோமசுந்தரம் நகரை சேர்ந்த பிரகாஷ் ஆர்பிஎப்காவலர் பாபன் சவுரானை கல்லால் தாக்கியும் கையில் கடித்து தப்ப முயன்ற போது கைது செய்தனர்

News September 11, 2024

மேல்விஷாரம் நகர்மன்ற தலைவர் காலமானார்

image

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர்மன்ற தலைவர் முகமது அமீன் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை காலமானார். இந்த செய்தி அறிந்த ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காந்தி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முகமது அமீன், 4ஆவது வார்டு கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 11, 2024

அரக்கோணத்தில் இன்றும் மின்சார ரயில் ரத்து

image

சென்னை கடற்கரை – விழுப்புரம் இடையே 2 நாட்கள் பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே காலை 4.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் நேற்று ரத்து செய்யப்பட்டநிலையில், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News September 11, 2024

ரயில் பயணிகள் கவனத்திற்கு; 4 பெட்டிகள் இணைப்பு

image

சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வழியாக இயக்கப்படும் ஏற்காடு, காவேரி திருவனந்தபுரம், ஆலப்புழா, மற்றும் வாராந்திர ரயில்களான நாகர்கோவில், கரக்பூர் ,புருலியா ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் வரும் ஜனவரி முதல் 4 பொதுப் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. இதனால் முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

News September 11, 2024

ராணிப்பேட்டை விஏஓ வங்கிக்கணக்கில் இன்று முதல் பணம்

image

டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு பணம் வழங்கப்படவில்லை என்று நேற்று விஏஓ சங்கத்தினர் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், ராணிப்பேட்டை டிஆர்ஓ சுரேஷ் அனைத்து வட்டாட்சியருக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி காலை 10 மணிக்குள் ஒரு சர்வே நம்பருக்கு ரூ. 10 வழங்கப்படும் அதை விஏஓ வங்கி கணக்கில் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

ராணிப்பேட்டை வீரர்களுக்கு ஆந்திராவில் பாராட்டு

image

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனமழை பெய்தது இதனால் அங்கு கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு என்டிஆர்எப் அதிகாரிகளை நேரில் அழைத்து துரிதமாக செயல்பட்டு மக்களையும் அவர்களது உடமைகளும் பாதுகாப்பாக மீட்டதற்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்.

News September 10, 2024

ராணிப்பேட்டையில் விளையாட்டுப் போட்டிகள்

image

ராணிப்பேட்டை ஜி.கே உலக பள்ளி வளாகத்தில் இன்று முதலமைச்சர் கோப்பை 2024-25க்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ஜி.கே உலகப்பள்ளி மேலாண்மை இயக்குனர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

error: Content is protected !!