Ranipet

News September 10, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் கொடுத்த ’அப்டேட்’

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் GROUP 2 மற்றும் GROUP 2A தேர்வு செப்.14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு 43 தேர்வு கூடங்களில் 10,987 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வுக்காக கூடுதல் சிறப்பு பேருந்து வசதிகள், தடையில்லா மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

ராணிப்பேட்டையில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியது

image

ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் வேப்பூர் ஊராட்சி விபி பேலஸ் வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து பெண் குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 10, 2024

ராணிப்பேட்டை: அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை

image

செப்.15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தோன்றிய நாள் ஆகிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த முப்பெரும் விழாவை திமுகவினர் அனைத்து இடங்களிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும். திமுக கொடி ஏற்றி இனிப்பு வழங்க வேண்டும். அனைவரது இல்லங்களிலும், கட்சி அலுவலகங்களிலும் கழக கொடி ஏற்ற வேண்டும் என கைத்தறி துறை அமைச்சர் காந்தி இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

அரக்கோணத்தில் மின்சார ரயில் ரத்து: தெற்கு ரயில்வே

image

சென்னை கடற்கரை – விழுப்புரம் இடையே இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே காலை 4.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது.

News September 9, 2024

ராணிப்பேட்டையில் நலத்திட்ட உதவிகளை

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், காதொலி கருவி, முழங்கை தாங்கி, சக்கர நாற்காலி, நடைப்பயிற்சி உபகரணம் உள்ளிட்ட 1.95 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வழங்கினார். மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் உடன் இருந்தார்.

News September 9, 2024

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் பழக்கத்தில் 10 ரூபாய் நாணயங்கள் இருந்து வருகின்றன. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. எனவே 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் உரிமையாளர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News September 9, 2024

ராணிப்பேட்டையில் 7 புதிய பதவிகள்

image

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கான புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 7 பதவிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய பதவிகளுக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

News September 9, 2024

ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயல் சின்னமாக வலுவடைந்து வருவதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

News September 9, 2024

ஆற்காட்டைச் சேர்ந்த சிறுவன் சிலம்பத்தில் உலக சாதனை

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவன் கிரகாம்பெல் சிலம்பாட்ட உலக சாதனை விழாவில் கலந்துகொண்டு சிலம்பத்தில் வெற்றி பெற்று சான்றிதழை பெற்றுள்ளார். பயிற்சியாளர் மற்றும் பலர் அந்த மாணவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News September 8, 2024

விநாயகர் சிலை ஊர்வல பாதையில் எஸ்பி ஆய்வு

image

ராணிப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நாளை நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ஊர்வலம் நடைபெற உள்ள முத்துக்கடை, வாலாஜா உள்ளிட்ட சாலைகளை பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி இன்று மாலை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!