India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாடு முழுவதும் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி வண்ணத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மூவர்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. இது பொது மக்களை கவர்ந்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் சோளிங்கர், அரக்கோணம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கிய ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்ட கழகச் செயலாளராக வி.காந்திராஜ், இணைச் செயலாளராக முகம்மது ரஃபி, பொருளாளர் தனபதி, துணை செயலாளர் விகாஸ், துணைச் செயலாளர் தேவி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 10 பேரையும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நியமனம் செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்க,ர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, இன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், நவல்பூர் சிறுமலர் (Little Flower) பெண் குழந்தைகள் பள்ளியில் கேக் வெட்டி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா. மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி மற்றும்பலர் உள்ளனர்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-IV & VAO தேர்விற்கான மாதிரித் தேர்வு நாளை (ஜன.25) 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரித் தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள், தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் நியமித்துள்ளார். இராணிப்பேட்டை கிழக்கு (சோளிங்கர் மற்றும் அரக்கோணம் (தனி)) தொகுதிகளுக்கு V.காந்திராஜ் BA., மாவட்ட செயலாளராகவும், இராணிப்பேட்டை மேற்கு (ஆற்காடு மற்றும் இராணிப்பேட்டை) தொகுதிகளுக்கு G.மோகன்ராஜ் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவங்களை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜனவரி 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் ஜனவரி 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடை பெறும் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்கிற தமிழரசன் கடந்த 16ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி உயிரோடு தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் யாதவர் சங்கத்தினர் இன்று நெமிலி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் சார்பில் சிறப்பு முகாம் நாளை (25ம் தேதி) அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் அட்டை போன்றவை மாற்றம் இருப்பின் இந்த சிறப்பு முகாமில் மனு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.