Ranipet

News July 19, 2024

தரவுகளை பதிவேற்றம் ஆய்வு செய்த ஆட்சியர் 

image

இராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சந்திரகலா  இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக பதிவறையில் வருவாய்த் துறை தொடர்பான தரவுகளை கணினியில் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், அலுவலக மேலாளர் பாபு உடன் இருந்தனர்/

News July 19, 2024

புதிய மாவட்ட ஆட்சியர் அதிரடி

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுள்ள சந்திரகலா வருவாய்த்துறை தரவுகளை பதிவேற்றம் செய்யும் பணி உட்பட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு செய்ய வந்த மாற்றுத்திறனாளியிடம் கோரிக்கை குறித்து கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News July 19, 2024

21ஆம் தேதி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் 21ம் தேதியன்று நடத்தப்படும் என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News July 19, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் பதவி ஏற்பு

image

தமிழகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி, ராணிபேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக தமிழக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை இயக்குநராக பணியாற்றி வந்த J.U சந்திரகலா நியமிக்கப்பட்டார். இதையடுத்து J.U சந்திரகலா ராணிப்பேட்டை ஆட்சியராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

News July 19, 2024

ராணிப்பேட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காரீப் பருவத்தில் தோட்டக்கலை பயிர்களான வாழை, மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2024-25 ஆண்டிற்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. காப்பீடு செய்ய கடைசி தேதி 16.9.2024 எனவும் மேலும் விவரங்களுக்கு உள்ள வட்டார தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

புதிய ஆட்சியருக்கு வரவேற்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியராக சந்திராகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவர் சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் துணை ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

News July 18, 2024

மாவட்ட ஆட்சியருக்கு பிரிவு உபசார விழா

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக வளர்மதி பணியாற்றி வந்தார். இவர் சமூகநல இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு ஆட்சியை வளர்மதிக்கு புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

News July 18, 2024

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியில் வரும் 27 ஞாயிற்றுக்கிழமை  காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 32 31 ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் இணைந்து முகாமை நடத்துகிறது. எட்டாம் வகுப்பு முதல் இளநிலை பட்டம் மற்றும் டிப்ளமோ என அனைத்து கல்வி தகுதிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும். வயதுவரம்பு 18 முதல் 25 வயது ஆகும். 

News July 18, 2024

ராணிப்பேட்டை: அமைச்சர் காந்தி நலத்திட உதவி வழங்கல்

image

சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் கரடிகுப்பம் சமுதாய கூடத்தில் இன்று(ஜூலை 18) மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் காந்தி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.78 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டிடங்களை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார். 

News July 18, 2024

“மஞ்சள் காமாலை காய்ச்சல் அச்சம் வேண்டாம்” – ஆட்சியர்

image

மழைக்காலம் தொடங்கியுள்ளதை தொடர்ந்து மஞ்சள் காமாலை காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. குளோரின் கலந்த தண்ணீரையும் சுகாதாரமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தேவையற்ற பொருள்களில் தண்ணீர் தேக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி, சுகாதார வழிமுறைகளை கையாள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!