Ranipet

News July 22, 2024

மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மனுக்களை பெற்றுக் கொண்டார் . அப்போது ஒரு மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளை ஆட்சியர் வழங்கினார் . அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News July 22, 2024

அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

image

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ் உடன் இருந்தார்.

News July 22, 2024

அதிமுக மாவட்ட செயலாளர் அழைப்பு

image

தமிழகத்தில் 3 வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து, அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் ரவி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

News July 22, 2024

428 பேர் எழுதினர்; 18 பேர் ஆப்சென்ட்

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று வாலாஜா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் வி.ஆர்.வி. பள்ளி ஆகிய 2 மையங்களில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 446 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 428 பேர் தேர்வு எழுதியதாகவும் 18 பேர் தேர்வு எழுத வரவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News July 21, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 21, 2024

ராணிப்பேட்டையில் அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

image

தமிழகத்தில் மின் கட்டணம் மற்றும் அனைத்து வரிகளையும் உயர்த்திய தமிழக அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வருகிற 22-ஆம் தேதி ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான என்.ஜூ.பார்த்திபன் தலைமை வகிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

10 மணி வரை மிதமான மழை பெய்யும்

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

News July 19, 2024

7 மணி வரை லேசான மழை பெய்யும்

image

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

News July 19, 2024

ராணிப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்

image

ராணிப்பேட்டை புதிய பாலார் பாலம் பராமரிப்பு பணி காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து மாற்றத்திற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மூலமாக தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மேம்பாலம் பணிகள் நடைபெறுவதாகவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.

News July 19, 2024

மக்கள் குறைள் உடனுக்குடன் தீர்க்கப்படும்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5-வது மாவட்ட ஆட்சியராக சந்திரகலா இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அரசின் திட்டங்களை எளிமையான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது மற்றும் மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

error: Content is protected !!