India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு ராபி பருவத்தில், பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல் பயிர்களுக்கு ஜன., 31ஆம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.518 தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (30.01.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு தியாகிகள் தினம் அனுசரிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஆகியவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, இ.கா.ப., தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

புளியங்கண்ணு கிராமம் கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்–தவர் வெங்கடேஷ் ( 57). குடும்ப தேவைக்காக தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.19 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். கடந்த மாதம் தவணை கட்ட முடியாததால் மனம் உடைந்து காணப்படடதாக கூறப்படுகிறது. நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய ஆதார் அட்டை பெற விண்ணப்பித்தல், புதுப்பித்தல் ஆகிய செயல்களுக்கான தேதி 31.12.24 அன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த கால அவகாசம் 31.3.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.ஷேர் செய்யுங்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய விண்ணபிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. புகைப்படத்தில் உள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in பதிவு செய்து கொள்ளலாம். மேலும், வேலை வாய்ப்பு நிறுவனம் தொலைபேசி எண் 044-22502267, whatsapp 9566239685 தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.1.2025) ஜனவரி 2025 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 29) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

இன்று (29.01.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை சேர்ந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் வாயிலாகவும் நேரடியாகவும் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் இன்று வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் மற்றும் உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஸ்பர்ஸ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் துணை இயக்குநர் பீரித்தா, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் இராஜராஜன் இருந்தனர்.

காவேரிப்பாக்கம் அருகே உள்ள சேரி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மனைவி ஆண்டாள் 70. இவர் நேற்று தனது வீட்டின் அருகில் இருந்த போது அவரை விஷப்பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் இன்று ஆண்டாள் உயிரிழந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.