Ranipet

News February 1, 2025

ரயிலில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்

image

ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று குற்றப் புலனாய்வு போலீசார் சோதனை நடத்தியதில் பயணிகளின் இருக்கைக்கு கீழே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார் என விசாரணை நடத்திவருகின்றனர். இதே ரயிலில் அடிக்கடி போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

News February 1, 2025

ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் “ஒரே கடவுச்சொல்லை ஒருபோதும் வேண்டாம்”. “சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்”. “தனிப்பட்ட அல்லது நிதி தகவலை ஒருபோதும் பகிர வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 31, 2025

இரவு ரோந்து போலீசாரின் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (31.01.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்

News January 31, 2025

ராணிப்பேட்டையில் நாளை மாதிரித் தேர்வு

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-IV & VAO தேர்விற்கான மாதிரித் தேர்வு நாளை (01.02.2025) காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரித் தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் புகைப்படம்-2, ஆதார் நகலுடன் போட்டித் தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News January 31, 2025

பாலாற்றில் கும்பமேளா புனித நீரை இணைக்கும் நிகழ்ச்சி

image

ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி ஆலய கருப்புசாமி சித்தர், மகா கும்பமேளா திருவேணி சங்கமத்தின் புனித தீர்த்ததை, ஆற்காடு பாலாற்றில் இணைக்கும் நிகழ்வு இன்று நண்பகல் நடைபெற்றது. இந்நிகழ்வு ஆற்காடு பாலாற்று நீர்நிலை வற்றாத ஜீவ நதியாக பெருகவும், உலக மக்களின் நன்மைக்காகவும், ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி அம்பாளுக்கு பாலாற்றில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு,<> சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ <<>>பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

News January 31, 2025

நெல் பயிருக்கு காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு ராபி பருவத்தில், பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல் பயிர்களுக்கு இன்று (ஜன. 31) விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.518 தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News January 30, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 30) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News January 30, 2025

காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

image

முன்னாள் படைவீரர்கள் (ம) சார்ந்தோரை தொழில் முனைவோராக உருவாக்க தொடங்கப்பட்டுள்ளது. முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை வங்கிகள் வாயிலாக கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். கடன் தொகையில் 30% மூலதன மானியமும், 3% வட்டி மானியமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 30, 2025

சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் காவல்துறை, அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!