Ranipet

News July 26, 2024

ராணிபேட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் நியமனம்

image

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி ராணிபேட்டை கிழக்கு மாவட்டத் தலைவராக மோகன்காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அரக்கோணம், சோளிங்கர் இரு தொகுதிகளை உள்ளடக்கி ராணிபேட்டை கிழக்கு மாவட்டமாகவும், ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிகளை உள்ளடக்கி மேற்கு மாவட்டமாகவும் பிரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News July 26, 2024

ராணிப்பேட்டையில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

பொதுமக்கள் நன்கொடையாக அளிக்கலாம் – ஆட்சியர்

image

சென்னை மெரினா கடற்கரை எதிரே ஹூமாயூன் மஹால் கட்டிடத்தில் சுமார் 80 ஆயிரம் சதுர அடி பரப்பில் சுதந்திர தின அருங்காட்சியம் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைத்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. எனவே பொது மக்கள் தங்கள் சேகரித்து வைத்துள்ள சுதந்திரம் போராட்டம் தொடர்பான பொருட்களை நன்கொடையாக அளிக்கலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூலை 31ஆம் தேதி காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இந்த
கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் வேளாண் தோட்டக்கலை, மின்வாரியம், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பலத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: கலெக்டர் தகவல்

image

‘மக்களுடன் முதல்வர்’ (ஊரகம்) திட்ட சிறப்பு முகாம்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம், ஆற்காடு, திமிரி, சோளிங்கர், வாலாஜா, அரக்கோணம் மற்றும் நெமிலி ஆகிய 7 வட்டாரங்களில், 15 துறைகளை ஒருங்கிணைத்து வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

காலை உணவை மாணவர்களுக்கு பரிமாறிய ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி மகிழ்ச்சி அடைந்தார். இதில் பள்ளி நிர்வாகத்தினர், அரசு துறை அதிகாரிகள் என பலர் உடன் இருந்தனர்.

News July 25, 2024

தொடக்கப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

image

நெமிலி தாலுகாவில் ’உங்களை தேடி உங்கள் ஊர்’ திட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று காலை நெமிலி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் உணவு வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் தட்டு, டம்ளர் பாத்திரங்கள் ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உடன் இருந்தார்.

News July 25, 2024

ராணிப்பேட்டையில் 44 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

image

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 44 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News July 24, 2024

7 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை நடைபெற உள்ளது. அதன்படி வி.சி.மோட்டூர் சமுதாயக்கூடம், தாஜ்புரா எம்.என் மஹால், மருதாலம் கூட்ரோடு சாந்தி ஆனந்தன் திருமண மண்டபம், காவனூர் குப்பம்மாள் தாண்டவராயன் திருமண மண்டபம், ஓச்சேரி எஸ்.ஆர்.ஆர் மண்டபம், அரக்கோணம் கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, மகேந்திராவாடி அரசு பள்ளி ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது.

News July 24, 2024

ராணிப்பேட்டையில் அடுத்த மாதம் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடுத்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகன உறுபத்தி தொழிற்சாலை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஆகஸ்ட் மாதாம் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், 5000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!