India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இந்நிலையில் அவர்களுடைய பதவிக்காலம் முடிவடையுள்ளதாக வந்த செய்தியை அடுத்து மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு அளித்த கடிதத்தில்,2021-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026 – அக்டோபர் 19 ஆம் தேதி முடிவடையும் என தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆற்காடு தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் வரும் 18ம் தேதி ஒரு நாள் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி கட்டிடங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்கிறார். அன்றைய தினம் இரவு அங்கு தங்கி இருந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களையும் பெற்றுக் கொள்கிறார் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., பரிந்துரையின் பேரில், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.கோபிநாத் 2.குமார் ஆகியோர் இன்று (13.09.2024) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாலாஜா தாலுகா கத்தியவாடி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் காயத்ரி (33). திருமணம் ஆகாதவர். ஆஞ்சியோ சர்ஜரி செய்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தார். இவரது தாய் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மூன்று நாட்கள் கழித்து வந்த நிலையில் வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. போலீசார் உதவியுடன் வீட்டை உடைத்து பார்த்ததில் காயத்ரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆற்காடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் மற்றும் போலீசார் வாலாஜா, ரத்தினகிரி, கொண்டபாளையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதிகளில் இன்று ரெய்டு நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 5 கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்தார். இணை இயக்குனர் நிவேதிதா, மாவட்டம் மருத்துவர் அலுவலர் செந்தில்குமார், காச நோய் உள்ளிட்ட பல பிரிவுகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டாக்டர், நர்ஸ் ஆகியோர் மருந்து வழங்க வேண்டும் என்றார்.
நெமிலி தாலுகா மேலப்புலம் ராமச்சந்திரா பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் இன்று பனப்பாக்கத்தில் இருந்து ஓச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த காரும், அரக்கோணம் நோக்கி வந்த வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை வாலாஜாபேட்டை ஹவுசிங் போர்டு பொதுமக்கள் சந்தித்தனர். அப்போது, எங்கள் பகுதியில் கால்வாய் பிரச்சினை உள்ளது. இதனை மாற்றி தர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் MC உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தால் பல்வேறு திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 10 ம் வகுப்பு முடித்த அல்லது ராணுவத்தில் அதற்கு இணையான கல்வி தகுதி பெற்ற விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை 15ம் தேதிக்குள் நேரில் அணுகலாம் என்று ஆட்சியர சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாதாந்திர குற்ற புலனாய்வு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து பள்ளி, கல்லூரி பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று போலீசாருக்கு, போலீஸ்சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி உத்தரவிட்டுள்ளார். மேலும், கஞ்சா உள்ளிட போதைப்பொருட்கள் விற்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.