India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 56 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அரசு கட்டிடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு இருப்பதால் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில், திண்டிவனம் நகரி ரயில் பாதை திட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் சிறப்பு தாசில்தார் மதிவாணன், சோளிங்கரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டு அந்த உரிமை ஆவணத்தை திருப்பித் தர இன்று ரூ. 4000 லஞ்சம் வாங்கிய போது ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 44 மனுக்கள் பெறப்பட்டன. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளர் சீராளன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-2 & 2A போட்டித் தேர்விற்கான மாதிரி தேர்வு (03.08.2024) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. குரூப் 2 தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வாளர்கள் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012(POCSO சட்டம்) குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குடிநீா் தொட்டிகளின் மேல் யாரும் செல்லாமல் தடுக்க கிராம பகுதிகளில் உள்ள 1805 மேல்நிலை தொட்டிகளில் இதுவரை 875 தொட்டிகள் தடுப்புகள் கொண்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், எஞ்சியுள்ள 930 தொட்டிகளில் இப்பணிகள் செப்டம்பா் மாதத்திற்குள்ளும், பேரூராட்சி, நகராட்சிகளில் செப்டம்பா் மாத இறுதிக்குள்ளும் முடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.86 லட்சம் மதிப்பில் 31,929 விவசாய குடும்பங்களுக்கு பண்ணை கருவிகள், விசைத்தெளிப்பான், தார்பாலின், உயிரி உரங்கள் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் மற்றும் தொகுப்புகள் ஆகியவை பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, திமிரி, காவேரிப்பாக்கம் என ஏழு வட்டாரத்தில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 15 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் ஒரே இடத்தில் பங்கேற்று மக்களிடம் மனுக்களை பெறுகின்றனர். இந்த முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் தமிழ் முதல்வன் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ் முதல்வன் திட்டம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று செயலர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.