India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெமிலி அசநெல்லிகுப்பத்தைச் சேர்ந்த மலையரசன் மகள் தாரணி ஸ்ரீ (10) 5ம் வகுப்பு படித்து வந்தார். தனது உறவினர்களுடன் சபரிமலைக்கு சென்றனர். கோயம்புத்தூரில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு வந்த போது திடீரென தாரணிக்கு வலிப்பு ஏற்பட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். தாரணி உடல் அசநெல்லிக்குப்பத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவன தொழிற்சாலைக்கு வரும் 28ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், தொழிற்சாலை அமைய உள்ள இடத்திலிருந்து மெயின் ரோட்டுக்கு அணுகு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இப்பணியை இன்று சென்னை சிப்காட் மேலாண்மை இயக்குநர் மற்றும் நெமிலி வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தேச துரோகி என்று விமர்சனம் செய்த பாஜக தற்காலிக பொருப்புக் குழு தலைவர் H.ராஜாவை கண்டித்து ஆற்காடு நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செய்தி தொடர்பாளரும், பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
ஆற்காடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபு மற்றும் சையத் கிஹசார் அகமது ஆசிரியர்களுக்கு சென்னை லயன்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக இன்று சிறந்த ஆசிரியருக்கான கேடயங்கள் பாராட்டி வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர் பர்வீன் சுல்தானா சிறப்புரையாற்றி, ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கேடயங்கள் வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் குடிநீர் வழங்குதல் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சசிகுமார் விசாரணை நடத்தி புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், கோபி ரஞ்சித் குமார் , காரை புஜித், ராணிப்பேட்டை ஜாக்சன், தண்டலம் தமிழ்ச்செல்வன் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இவர்கள் மும்பையில் இருந்து ரயிலில் போதை மாத்திரை வாங்கி வந்து ஒரு மாத்திரை ரூபாய் 300 விற்பனை செய்வது தெரிந்தது.
தமிழக முழுவதும் நேற்று ஒரே நாளில் 30 சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதனால் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் எந்த நேரத்திலும் வரலாம் என்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயந்திருந்தனர். அதே நேரம் இரவு 10 மணி ஆகியும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வரவில்லை. இதனால் அதிகாரிகள் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு 2 கோடியே 50 லட்சம் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3 தொழில் கூடங்களுடன் 2 ஏக்கர் நிலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் இன்று 16-09-2024 மாலை 6 மணி அளவில் மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் தலைமையில் நடைபெற உள்ளது இதில் அதிமுக கழக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனிசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார்.
Sorry, no posts matched your criteria.